• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-12 16:57:25    
2014ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்

cri

2014ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விரும்பி விண்ணப்பிகும் இறுதி கட்ட முயற்சிகளில் 3 நகரங்கள் இறங்கியுள்ளன.

கடந்த புதனன்று வரை விண்ணப்பிக்கும் நாடுகள் தொடர்புடைய ஆவணங்களை சமர்பிக்க அளிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள்ளாக தென்கொரியா, ஆஸ்திரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் 3 நகரங்கள் தங்களது விண்ணப்ப ஆவணங்களை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் ஒப்படைத்தன.

தென்கொரியாவின் பியோங்சாங், ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் மற்றும் ரஷ்யாவின் சோச்சி ஆகிய நகரங்கள் 2014ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விண்ணப்பிக்கும் இறுதி கட்ட போட்டியாளர்கள் ஆகும். இந்த நகரங்களின் விண்ணப்பங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை பரிசீலிக்கும் முகமாக எதிர்வரும் பிப்ரவரி மாதம் 14 முதல் 17 வரை தொன் கொரியாவின் பியோங்சாங்கிலும், பிப்ரவரி 20 முதல் 23ம் நாள் வரை ரஷயாவின் சோச்ஷி நகரிலும், மார்ச் திங்கள் 14 முதல் 17ம் நாள் வரை ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்கிலும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தேர்வு ஆணையம் பயணம் மேற்கொண்டு, இந்த நகரங்களின் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட கட்டுமானங்கள், வசதிகளை ஆய்வு செய்யும். ஒரு மாதத்திற்குள்ளாக இந்த தேர்வு ஆணையம் தனது அறிக்கையை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் சமர்பிக்க, ஜூலை 4ம் நாள் குவாட்டமாலவில் 2014ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரம் தேர்ந்தெடுக்கப்படும்.

கடந்த 2003ம் ஆண்டில் நடைபெற்ற 2010ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை 2 வாக்குகள் வித்தியாசத்தில் தென்கொரியாவின் பியோன்சாங் கனடாவின் வான்கூவரிடம் தவறவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.