இனிமேல், சீனாவின் மூலதனச் சந்தை, மேலும் உயர் பயன் தரும். மேலும் திறந்து விடப்படும். உள்நாட்டு வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு சிறந்த நிதி நிரட்டல் வாய்ப்பை வழங்கும் என்று சீன பங்கு பத்திர கண்காணிப்பு மற்றும் நிர்வாகக் கமிட்டியின் துணை தலைவர் Tu Guang Shao கூறியுள்ளார்.
இன்று பெய்சிங்கில் 11வது சீன மூலதனச் சந்தை கருத்தரங்கில் பங்கெடுத்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சீனாவின் மூலதனச் சந்தை, தற்போது சிறந்த வளர்ச்சி நிலையில் உள்ளது. இனிமேல், நிர்வாகத்திலுள்ள அரசு தலையீட்டைச் சீனா மேலும் குறைக்கும். நிறுவனத்து முதலீட்டாளர்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும். சந்தையில் நுழையும் கூட்டு நிறுவனங்களின் தரத்தில் கவனம் செலுத்தும். அதே வேளையில், வெளிநாட்டுத் திறப்பு பணியை விரிவாக்கும் என்றும் அவர் சொன்னார்.
|