
கடந்த ஆண்டு, சீனத் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு, 2900 கோடி யுவானைத் தாண்டியது. 2005ஆம் ஆண்டில் இருந்ததை விட இது 13.2 விழுக்காடு அதிகம். தொடர்ந்து 6 ஆண்டுகளாக, 12 விழுக்காட்டுக்கு மேலான அதிகரிப்பு விகிதத்தை நிலைநிறுத்துகின்றது. இன்று திபெத் தன்னாட்சி பிரதேசத்திலிருந்து எமது செய்தியாளர் இதை அறிவித்தார். புள்ளி விபரங்களின் படி, கடந்த ஆண்டு, திபெத்தில் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் நபர்வாரி நிகர வருமானம், 2350 யுவானை எட்டியுள்ளது. இது, 2005ஆம் ஆண்டில் இருந்ததை விட 13 விழுக்காடு அதிகம்.
|