பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்
cri
இவ்வாண்டு, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஆயத்த பணிக்கு மிக முக்கியமான ஆண்டாகும். பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆயத்த நிலையில் இருக்கின்றன. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 26 சோதனை போட்டிகளில் இப்பாதுகாப்பு நடவடிக்கைகளின் நடைமுறையாக்க பயன் பன்முகங்களிலும் சோதிக்கப்படும் என்று 29வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கான பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் Qiang Wei கூறியுள்ளார். இன்று பெய்சிங்கில் பேசிய அவர், உலகின் கவனத்தை ஈர்க்கும் பெரிய ரக சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சியான ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் பல்வேறு வடிவச் சர்வதேச பயங்கரவாதத் தாக்குதலின் இலக்காக இருந்தது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில், பெரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில், முற்றிலும் பாதுகாப்பானது என்ற குறிக்கோளை நனவாக்க, சர்வதேசச் சமூகத்துடன் பெரிதும் ஒத்துழைக்க வேண்டும். குறிப்பாக, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்கும் நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்று Qiang Wei கூறினார்.
|
|