• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-15 16:32:25    
சிங்செங் மலையும் துச்சியாங் அணைக்கட்டும்

cri

சீன வானொலி நிலையமும் சீன ஸ்சுவான் மாநிலத்து சுற்றுலாப் பணியகமும் இணைந்து ஏற்பாடு செய்யும் பாண்டாக்களின் பிறந்தகம்-சீன ஸ்சுவான் மாநிலம் என்பது பற்றிய சுற்றுலா அறிவுப் போட்டிக்கான சிறப்பு நிகழ்ச்சியை நீங்கள் தவறாமல் கேட்டுவருவதை வரவேற்கின்றோம். இன்று நாங்கள் ஸ்சுவான் மாநிலத்தின் தலைநகரான சங்து நகருக்கு அருகிலுள்ள உலக பண்பாட்டு மரபுச்செல்வமான சிங்செங் மலைக்கும் துச்சியாங் அணைக்கட்டுக்கும் சென்று பார்க்கலாம். ஸ்சுவான் மாநிலத்தின் தலைநகரான சங்துவின் வட மேற்கு பகுதியிலிருந்து புறப்பட்டுக் காரில் சுமார் ஒரு மணி நேரம் பயணித்தால், சிங்செங் மலையைச் சென்றடையலாம்.

சிங்செங் மலை, சீனாவின் தாவ் மதம் பிறந்த இடங்களில் ஒன்றாகும். மனிதரும் இயற்கையும் இணக்கமாக இருப்பது என்பது தாவ் மதத்தின் கருத்து. சுமார் 1800ஆம் ஆண்டுகளுக்கு முன்னர், தாவ் மதத்தைத் துவக்கிவைத்த சாங்லின் என்பவர், இந்தப் பசுமையான சிங்செங் மலையின் அழகையும் அமைதியையும் விரும்பியதால், இவ்விடத்தில் தாவ் மதச் சித்தாந்தத்தை உருவாக்கினார் என்று மக்கள் ஊகித்துபார்க்கின்றனர்.

தாவ் மதம் துவக்கிவைக்கப்பட்ட பின்னர், அது நீண்ட காலம் சீனாவிலும் கிழக்காசியாவிலும் பெரும் செல்வாக்கு வாய்ந்த மதமாக இருந்துவந்தது. தற்போது சிங்செங் மலையில் உள்ள சுமார் நூறு தாவ் மதத்தவர்கள், மத விதிகளின் படி கட்டுப்பாட்டுடன் கூடிய வாழ்க்கையை நடத்திவருகின்றனர். ஆனால், தாவ் மதத்தின் துவக்கக் காலத்திலே நிலைமை அப்படி இருக்கவில்லை என்று வழிகாட்டி காங்யு கூறினார். அவர் கூறியதாவது, அப்போது, தாவ் மதத்தவர்கள் தத்தமது வீடுகளில் தாவ் மதச் சித்தாந்தத்தைக் கற்றுக்கொண்டு தங்களது செயல்பாடுகளுக்கு வழிகாட்டியாக அதனை கொண்டிருந்தனர். அவர்கள் திருமணம் செய்து குழந்தை பெறவும், மது குடிக்கவும் இறைச்சி வகைகளை உண்ணவும் அனுமதிக்கப்பட்டனர். தர்மம் செய்வதில் அவர்கள் கவனம் செலுத்தினர். ஆனால் தற்போதைய நிலைமை அதிலிருந்து வேறுபடுகின்றது.

சிங்செங் மலையில் தங்கியிருக்கும் தாவ் மதத்தவர்கள் தத்தமது குடும்பத்தினர்களை விட்டுவிலகிய பின்னர், தாவ் மத ஆசிரியர்களிடமிருந்து தாவ் மதச் சிந்தனையைக் கற்றுக்கொண்டு, தாவ் மத நெறிக்கிணங்க தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். மது குடிக்கவோ, இறைச்சி வகைகளை உண்ணவோ, திருமணம் செய்து குழந்தை பெறவோ அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றார் அவர். இதுவரை சிங்செங் மலையில் பத்துக்கு மேலான தாவ் மதக் கோயில்களும் ஏராளமான தொல்பொருட்களின் சிதிலங்களும் செவ்வனே பாதுகாக்கப்பட்டுள்ளன. எளிமை, இயற்கை ஆகியவற்றுக்குத் தாவ் மதத்தவர்கள் மதிப்பு அளிப்பதால், இம்மலையிலுள்ள தாவ் மதக் கோயில்களிலும் கூடாரங்களிலும் பெரும்பாலானவை, அடர்ந்த மரங்களுக்கிடையில் அமைந்து, சுற்றுப்புறத்தில் உள்ள மலைகள், மரங்கள், கற்பாறைகள் மற்றும் நீருற்றுகளுடன் இணைந்து எழில் மிக்க இயற்கைக் காட்சியாக உள்ளன. இந்தக் கோயில்களில் சிங்செங் மலையின் உச்சிக்கு அருகில் அமைந்துள்ள சாங்சிங்குங் கோயிலில் வழிபாடு செய்ய, தாவ் மத நம்பிக்கையுடையவர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். இக்கோயிலில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ள தாவ் மதத்தைத் துவக்கிவைத்தவரான லாவுசியின் உருவச் சிலை குறிப்பிடத் தக்கது.
சிங்செங் மலையின் அமைதியையும் தாவ் மதப் பண்பாட்டின் வளத்தையும் உணர்ந்துகொண்ட பின்னர், இந்தச் சுற்றுலா நெறியில் அமைந்துள்ள பார்வையிடுவதற்குரிய மற்றொரு காட்சித் தலத்தை உங்களோடு சேர்ந்து கண்டுகளிக்கிறோம். சிங்செங் மலைக்கு அருகில் அமைந்துள்ள துச்சியாங் அணைக்கட்டு இது. உலகில் இதுவரை மிக நீண்ட வரலாறுடைய நீர் சேமிப்புத் திட்டப்பணியும் இதுவாகும்.

மின்சியாங் ஆற்றின் நடுப்பகுதியில் அமைந்துள்ள துச்சியாங் அணைக்கட்டு, சுமார் 2000ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் அங்குள்ள அதிகாரி லீபின் என்பவரின் தலைமையில் கட்டியமைக்கப்பட்டது. உலகில் தொன்மை வாய்ந்த புகழ்பெற்ற நீர் சேமிப்புத் திட்டப்பணிகளில், பண்டைக் கால Babylon மன்னராட்சி மற்றும் பண்டைகால ரோம் நாட்டில் செயற்கை முறையில் தோண்டியெடுக்கப்பட்ட கால்வாய்கள், வெகு காலத்திற்கு முன்பே பாழாகிவிட்டன. சீனாவின் துச்சியாங் அணைக்கட்டு மட்டுமே இதுவரையிலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

இந்த அணைக்கட்டுக் கட்டப்படுவதற்கு முன்னர், ஒவ்வொரு ஆண்டின் வசந்த காலத்திலும் கோடைக்காலத்திலும் வெள்ளம் ஏற்பட்ட போதெல்லாம், ஆற்று நீர் பாய்ந்து ஓடியதால் வெள்ளப்பெருக்கு அடிக்கடி நிகழ்ந்தது. ஆனால், துச்சியாங் அணைக்கட்டின் வடிவமைப்பின் படி, மின்சியாங் ஆறு 2 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதால், வெள்ள நீரை வெளியேற்றுவதோடு, வயலுக்கு நீர்ப்பாசனம் செய்யவும் முடியும். அதாவது மின்சியாங் ஆறு, உட்புற ஆறாகவும் வெளிப்புற ஆறாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத்துக்கு உட்புற ஆறும் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு வெளிப்புற ஆறும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கப் பயணி Ken Boyd, துச்சியாங் ஆற்றின் நுட்பமான வடிவமைப்பினாலும் பண்டைக் காலச் சீன மக்களின் விவேகத்தினாலும் வியப்படைந்தார். அவர் கூறியதாவது, துச்சியாங் அணைக்கட்டு சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதை அறிந்து வியப்படைகின்றேன். நீரோட்டத்தை இந்த அணைக்கட்டு கட்டுப்படுத்தியதால், வறட்சிக்காலத்தில் நீர்ப்பாசனம் செய்வதற்குப் போதிய அளவு நீர் உள்ளது. இதன் விளைவாக விவசாயிகள் பயன் பெறலாம். மழைக் காலத்தில் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் பாதிப்பு தவிர்க்கப்படலாம் என்றார் அவர்.
துச்சியாங் அணைக்கட்டு இருப்பதன் காரணமாக, இன்றைய சீனாவின் ஸ்சுவான் மாநிலத்தில் இவ்வளவு அதிகமான எழில் மிக்க இயற்கைக் காட்சிகளும் வரலாற்றுச் சிறப்பு மிக்க காட்சித் தலங்களும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்து இக்கட்டுரையுடன் தொடர்புடைய 2 வினாக்களை வழங்குகிறோம். கவனமாகக் கேள்ளுங்கள். ஒன்று, சிங்சங் மலை, சீனாவின் தாவ் மதம் பிறந்த இடங்களில் ஒன்றா?இரண்டு, துச்சியாங் அணைக்கட்டு, உலகில் இதுவரை மிக நீண்ட வரலாறுடைய நீர் சேமிப்புத் திட்டப்பணியாகும்.0 அது கட்டியமைக்கப்பட்டு எத்தனை ஆண்டுகளாகின்றன?