ஐரோப்பிய நாடுகளிலான 2006ம் ஆண்டுக்கான சிறந்த தடகள வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நைஜீரியாவில் பிறந்த போர்ச்சுகள் நாட்டு தடகள வீரர் பிரான்ஸிஸ் ஒபிக்வேலோ 2006ம் ஆண்டின் சிறந்த ஐரோப்பிய தடகள வீரராக தெரிவு செய்யப்பட்டிருக்க, ஸ்வீடன் நாட்டு காரோலீனா க்ளஃப்ட் 2006ம் ஆண்டின் சிறந்த ஐரோப்பிய தடகள வீராங்கனையாகியுள்ளார். 2006ம் ஆண்டில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள் 16லும், 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள் 6லும் வெற்றி பெற்ற போர்ச்சுகலின் ஓட்டபந்தய வீரர் பிரான்சிஸ் ஒபிக்வேலோ கடந்த ஆண்டின் ஐரோப்பிய தடகள சாம்பியன் போட்டிகளின் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் சாம்பியன் பட்டத்தையும், ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கத்தையும் பெற்றவர்.
23 வயது காரோலீனா க்ளஃப்ட் கடந்த 13 வருட கால சிறந்த ஐரோப்பிய தடகள வீரர் வீராங்கனை விருது நிறுவப்பட்ட வரலாற்றில் 2 முறை இவ்விருதை பெற்ற முதல் நபராகியுள்ளார். ஏற்கனவே 2003ம் ஆண்டில் இவர் ஐரோப்பாவின் சிறந்த தடகள வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். ஹெப்டத்லான் எனப்படும் 8 வகை விளையாட்டுகள் கொண்ட போட்டியில் உலக சாம்பியன், ஒலிம்பிக் சாம்பியன் மற்றும் ஐரோப்பிய சாம்பியனாக இருப்பவர் காரோலீனா க்ளஃப்ட் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
|