• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-16 10:22:00    
சீன சுதேச மருந்து பற்றி எப்படி உட்கொள்வதென்ற முறை

cri

 இது பற்றி சீன சுதேச மருந்து அறிவியல் குழகத்தின் இயக்குநர் லியான் ஐ குவா அம்மையார் கூறியதவாது.

"தற்போது வெளிநாடுகளில் சில மருத்துவ நிலையங்களில் சீன சுதேச மருந்தைக் கொண்டு சிகிச்சை செய்ய அனுபவமுள்ள மருத்துவர்கள் குறைவு. ஆகவே அங்கு பாதகமான பக்க விளைவு ஏற்படும் விகிதாச்சாரம் அதிகம். தற்போது வெளிநாடுகளில் ஏற்பட்ட பாதக பக்க விளைவுகளைப் பார்க்கும் போது சிலர் தவறாக மருந்துகளை பயன்படுத்தினர். வேறு சிலர் மருந்தை சரியான அளவில் உட்கொள்ள வில்லை"எந்றார்.

இரண்டு சீன சுதேச மருந்தின் பாதுகாப்பு பற்றிய விவாதம். விளங்கக் கூறின், சீன சுதேச மருந்துகளில் உள்ள நச்சுத் தன்மை பிரச்சினை. சில சீன மருந்துகளில் பாதகம் உள்ளிட்ட கன ரக உலோகப் பொருட்கள் அல்லது நச்சுத் தன்மை வாய்ந்த செடி கொடிகள் மற்றும் விலங்குள் உண்டு என்பது உண்மையே. மேலை நாட்டு மருத்துவ தத்துவத்தின் படி இந்த நச்சு பொருட்கள் உடன் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் சீன சுதேச மருத்துவ தத்துவத்திற்கேப உரிய முறையில் இந்த நச்சுப் பொருட்களைப் பயன்படுத்துவதில் மருத்தவர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். சீன சுதேச மருத்துவமும் மேலை நாட்டு மருத்துவமும் முற்றிலும் வேறுபட்டிருப்பதால் நச்சுத் தன்மை பற்றிய சீன மருத்துவத்தின் தொடர்பான தத்துவம் மேலை நாட்டு மருத்துவத்தின் ஆதரவை பெறுவது சிரமமாக உள்ளது என்பது தெளிவு.

மேலும் பிரிட்டிஷ் மருந்து பாதுகாப்பு வாரியம் முன்வைத்த இரண்டு சீன சுதேச மருந்துகள் பறர்றி எமது செய்தியாளர் சில நிபுணர்களை பேட்டிக் கொண்டார். "கலப்பு கற்றாழை மருந்தில்"உள்ள பாதரகத்தின் நச்சு தன்மை அதிகமில்லை. குறிப்பிட்ட அளவிலும் நேரத்திலும் சரியான முறையில் இதை உட்கொண்டால் பாதுகாப்பாகவும் பயன் தரும் வகையில் இருக்கும். POLY GONUM MULTIFLORUM எனும் மருந்து, சீனாவில் சில நூறு ஆண்டுகளாக பயன்படும் சீன சுதேச மருந்தாகும். பாதகமான பக்க விளைவு என்பது பெருமாலும் அளவுக்கு மிஞ்சி உட்கொள்வதால் ஏற்பட்டதாகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இருப்பினும் சீன மருந்தாக்க தொழில் நிறுவனங்களின் மீது கண்டிப்பான கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் தற்போது அவற்றின் உற்பத்தி போக்கில் ஒரு சில மருந்துகளின் தரம் குறைவாக உள்ளது என்று சீன நிபுணர்கள் கூறியுள்ளனர். பெய்சிங் சுகாதார பள்ளியின் சீன சுதேச மருந்தாக்க ஆய்வாளர் சிங் சு யுவான் கூறியதாவது.

"முதலில் மூலிகைகளின் தரம் அது உண்மையான மருந்தாக இருக்க வேண்டும் இரண்டாவதாக மருந்தாக்க போக்கு. மருந்து தயாரிக்கும் போது துணை பொருட்களை வைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மருந்தாக்க நேரம் போதுமா என்பதையும் கவனிக்க வேண்டும்"எந்றார்.

நேயர்களே சீன சுதேச மருந்து சீனாவின் அரிய செல்வமாகும். பல்லாயிரமாண்டுகளாக திரட்டப்பட்ட பல வளமான தத்துவங்களும் நிறைய அனுபவங்களும் தவறற்ற சிகிச்சையும் தந்த பயன்களால் சீன மக்களின் ஏன் வெளிநாட்டு மக்களின் நம்பிக்கையையும் வரவேற்பையும் வென்றெடுத்துள்ளன. எனவே சீன சுதேச மருந்தில் உள்ள நச்சுத் தன்மை வாய்ந்த பக்க விளைவை அளவுக்கு மீறி வற்புறுத்தி மிகைப்படுத்தி சீன சுதேச மருந்தின் சிகிச்சை பயனையும் பாதுகாப்பையும் நிராகரிப்பது அறிவியல் பூர்வமான முறையள்ள. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வரும் இன்றைய சீனாவில் சீன சுதேச மருந்தின் ஆராய்ச்சி மற்றும் தரம் உயர்த்தப்படும் என்பது உறுதி.

நேயர்கள் இதுரை சீன சுதேச மருந்து பற்றி கேட்டீர்கள். இத்துடன் சீன நல வாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நிறைவு பெறுகின்றது.