• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-16 14:56:55    
ஆட்டிறைச்சி சமைப்பதற்கான வழி முறை

cri

கிளிடஸ்.......ஆட்டிறைச்சி சமைப்பதற்குத் தேவையான பொருட்களை சேகரிப்பது கஷ்டம் இல்லை. சமைப்பது எப்படி?
கலை.......கவலைப்படாதீங்க. நாம் முதலில் எலும்பு கொண்ட ஆட்டிறைச்சியை சுத்தம் செய்ய வேண்டும். எலும்பிலிருந்து இறைச்சியை பிரித்து சிறிய துண்டு துண்டாக வெட்டி மசாலாப் பொருட்களை ஆட்டிறைச்சித் துண்டுகளுடன் பிசைந்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
கிளிடஸ்......20 நிமிடம் கழிந்த பின் என்ன செய்ய வேண்டும்?
கிலை.......அப்புறம் தீயின் மேல் காய்கறி சமைக்கும் பாத்திரத்தை வையுங்கள். உள்ளே உணவு எண்ணெய் ஊற்றுங்கள். தீயின் அளவை அதிகரித்து சூடாகிய பின் மசாலாப் பொருட்களில் ஊறிய ஆட்டிறைச்சித் துண்டுகளை பாத்திரத்தில் உணவு எண்ணெயுடன் பொறிக்க வேண்டும். இறைச்சித் துண்டுகளை இரண்டு பக்கமும் கொஞ்ச நேரம் பொறித்த பின் வெளியே தட்டில் எடுத்து வையுங்கள்.
கிளிடஸ்.......இப்போது வெங்காய துண்டுகள் உருளைக் கிழங்குத் துண்டுகள், கேரட் துண்டுகள் ஆகியவற்றை பொறிக்க வேண்டுமா?

 கலை.......ஆமாம். இரண்டு கரண்டி உணவு எண்ணெயுடன் வங்காயத்தை முதலில் பொறிக்க வேண்டும். வெங்காயம் சற்று நிறம் மாறிய பின் மசாலாத் தூளை உள்ளே போட்டு தாளிக்க வேண்டும். பின் கேரட், உருளைக் கிழங்கு ஆகியவற்றை உள்ளே போட்டு பொறிக்க வேண்டும். ஒரு நிமிடம் பொறித்த பின் உப்பு மது, சர்க்கரை ஆகியவற்றுடன் தண்ணீரை ஊற்ற வேண்டும்.
கிளிடஸ்.......எத்தனை நிமிடம் வேகவைக்க வேண்டும்?
கலை........ வங்காயச் சாறு கொதித்த பின் தீயின் அளவைக் குறைத்து பத்து நிமிடம் வேகவைக்க வேண்டும். பின் முதலில் பொறிக்கப்பட்ட ஆட்டிறைச்சியை உள்ளே போடுங்கள். குழம்பு நன்றாகக் கொதித்து கெட்டியாகிய பின் இந்த ஆட்டிறைச்சிக் குழம்பு தயாராகிவிடும்.
கிளிடஸ்.........இப்போது தீயை அணைத்து ஆட்டிறைச்சிக் குழம்பை வேறு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.

கலை........ஆமாம். இப்போது சுவைத்து பார்ப்பது முக்கிய வேலையாகும்.
கிளிடஸ்......சரி இதை நான் நிச்சயம் முக்கியமாக பயிற்சி செய்ய வேண்டும். பிறகு பல வகை காய்கறிகளை சமைக்க முடியும்.
கலை.......ஆமாம். பயிற்சி முதல். துணிவுடன் இதை செய்யுங்கள். பிறகு சமையல் சுவையாக உங்கள் வாழ்க்கையும் செழுமையாகிவிடும்.
கிளிடஸ்.......நண்பர்களே. ஆட்டிறைச்சி சமைப்பதைக் கற்றுக் கொண்டீர்களா? நிகழ்ச்சிக்குப் பின் பயிற்சி செய்து பார்த்து சுவைத்துப் பாருங்கள்.
கலை......சீன உணவரங்கம் நிகழ்ச்சி முடிவடையும் நேரம் ஆகிவிட்டது. அடுத்த முறை மீண்டும் புதிய ஒரு சமையல் குறிப்போடு சந்திப்போம். வணக்கம் நேயர்களே.