• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-16 17:43:33    
இன்பமும் துன்பமும்

cri
உறவு வரும் பிரிவும் வரும் வாழ்க்கை ஒன்று தான் என்பது பழைய தமிழ்த் திரைப்படப் பாடல். இனிமையும் தனிமையும், இனிப்பும் கசப்பும் சேர்ந்தது தான் வாழ்க்கை. Xi Nu Ai Le-மகிழ்ச்சி, கோபம், துக்கம், இன்பம் இவையே வாழ்க்கை என்கிறது-சீனப் பழமொழி. Xi என்றால் மகிழ்ச்சி, Nu என்றால் கோபம், Ai என்றால் துக்கம். Le என்றால் இன்பம். இந்தத் தத்துவதத்தை மிக அழகாக விளக்குகிறது ஒரு பழைய சீனக் கவிதை-Yue You Yin Qing Yuan Que, Ren You Bei Huan Li He-நிலவு மங்கி மறையலாம், பூரணமாக ஒளிரலாம்; மனிதனுக்கோ இன்பமும் துன்பமும், உறவும் பிரிவும் இணைந்தே வரலாம்.
மகிழ்ச்சி என்பது மனிதனுக்கு மிக எளிதில் கிடைப்பதில்லை. சும்மா வருமா சுதந்திரம்? வேதனையில் இருந்து விடுபடுவது அவ்வளவு சுலபமா? கடவுள் கொடுக்கும் வரம்பிரசாதம் தான் மகிழ்ச்சி என்கிறார்கள் சீனர்கள். Xi Cong Tian Jiang-மகிழ்ச்சி சொர்க்கத்தில் இருந்து விழ வேண்டுமாம். எப்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது? எதிர்பார்ப்பது நிறைவேறிவிட்டால் மகிழ்ச்சிக் கடலில் மூழ்குகிறோம். அப்போது நம்மையே கூட மறந்து விடுகிறோம் என்னும் போது கடவுளுக்கு ஏது இடம்? நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்பதல்லவா கவிஞர் வாக்கு? உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்குமானால் உங்கள் வாசல் கதவை இரட்டை மகிழ்ச்சி தட்டுமாம்-Shuang Xi Lin Men-இரட்டை மகிழ்ச்சியில் மூழ்கித் திளைக்கும் போது உங்கள் இதயமலர் முழுமையாக மலரும்-Xin Hua Nu Fang
ஆனாலும்-ஆனந்தக் காற்று அலை அலையாய் வீசி, உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் போது, Xi Qi Yang Yang-பக்கத்து வீட்டுக்காரர் சும்மா இருப்பாரா? அவருடைய உள்ளத்தில் கோபக் காற்று கொந்தளிக்குமாம்-Nu Qi Chong Chong-பொறாமையால் சினத்தீ உள்ளுக்குள்ளேயே கொழுந்து விட்டு எறியுமாம்-Nu Huo Zhong Shao, அல்லது அவருடைய தலையில் இருக்கிற கண்கள், காதுகள், மூக்குத் துளைகள், வாய் ஆகிய ஏழுகளைகளும் புகை கக்குமாம்-Qi Qiao Sheng Yan, அல்லது அவர் தலையில் உள்ள மயிர் கோபத்தீயில் எரிந்து அனிந்திருக்கும் தொப்பியைக் கூட மொசுக்கிவிடுமாம்-Nu Fa Chong Guan.
ஒருவரின் மகிழ்ச்சி இன்னொருவருக்கு வேதனை என்பது தானே உலக நியதி!