• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-17 14:56:22    
விவாக ரத்து 1

cri

"ஆ! மு தாத்தாவா? புத்தாண்டு வாழ்த்துக்கள்!"

"எப்படிஇருக்கே, பா சன்? புத்தாண்டு வாழ்த்துக்கள்."

"புத்தாண்டு வாழ்த்துக்கள். ம்... அய் கு வந்திருக்காப்ல இருக்கே."

"ஆமா" என்றாள் அய் கு.

மு-வும், அவருடைய மகள் அய்-குவும் படகுக்குள் காலடி எடுத்து வைத்த போது சிறிது சலசலப்பு எழுந்து அடங்கியது. பயணிகளில் சிலர் கரங்களை நெஞ்சுக்கு நேராக கோர்த்து மடக்கியபடி, குனிந்து வணங்கினர். கேபின் அருகே இருந்த பெஞ்ச்சில் உட்கார்ந்திருந்த நான்கு பேர் எழுந்து இடம் கொடுத்தனர். எல்லோருக்கும் வாழ்த்துச் சொல்லியபடியே, உட்கார்ந்த சுவாங் மு, தமது நீண்ட பைப்பை படகின் ஓரமாக சாய்த்து நிறுத்தினார். பா-சனுக்கு இடது புறமாக அய் கு உட்கார்ந்தாள். அவளுடைய பன்னரிவாள் போன்ற பாதங்கள் "V"வடிவில் விரிந்திருந்தன.

"நகரத்துக்கு போறிங்களா? மு தாத்தா?" நண்டு ஓடு போல முரமுரப்பாக முகத்தை வைத்திருந்த ஒருவன் கேட்டான்.

"நகரத்துக்கு இல்லே" சுரத்து இல்லாமல் பேசினார் மு தாத்தா. அவருடைய கன்றிச் சிவந்த முகத்தில் சுருக்கங்கள். எப்போதும் போலவே இருந்தனர்.

"பங் கிராமத்துக்கு போக வேண்டியிருக்கு" படகில் இருந்த எலமலோரும் அவர்களையே உற்றுப் பார்த்தனர்.

"பழையபடி அய் கு விவகாரமா?" கடைசியாக பா-சன் கேட்டான்.

"அதுதான்... இந்த விவகாரம் என்னைக் கொன்னுட்டுத்தான் விடும். மூணு வருசமா இழுபறியா இருக்குது. சண்டை போட்டு, சமாதானமாகி, சண்டை போட்டு சமாதானமாகி, திரும்பத் திரும்ப... இன்னும் விவகாரம் தீர்ந்த பாடா இல்லே."

"திரும்பவும் வெய் வீட்டுக்குப் போவீங்களா?"

"ஆமா. அவரும் எத்தனை தடவை சமரசம் செஞ்சு வச்சிட்டாரு. ஆனா அவரு சொல்ற நிபந்தனைகளைத்தான் என்னாலே ஒப்புக்க முடியலே. அவங்க குடும்பத்துல புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக எல்லோரும் வர்றாங்க. நகரத்துல இருந்து ஏழாவது முதலாளி கூட வர்றாரு..."

"ஏழாவது முதலாளியா?" பா-சன் அகல விழித்தபடியே, "அவரும் வந்து விவகாரம் பேசப் போறாரா? ம்... நல்லது. போன வருசம் அவங்க வீட்டு சமையல் அறையை நாங்க இடிச்சுப் போட்டுட்டோம். பழி தீர்த்தாச்சு. அப்புறம் அய்-கு அங்க போறதில அர்த்தமே இல்லை..." அவர் பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்.

"பா-சன் அண்ணே, நான் திரும்பவும் அங்க போகப் போறதில்லே. அவங்க மூஞ்சியில காறித் துப்பணும். அந்த சின்ன பிசாசு விதவையைக் கூட்டி வச்சிக்கிட்டு என்னைய வேண்டாம்னு ஒதுக்கிட்டான். அவ்வளவு லேசுல முடிஞ்சிருமா விவகாரம்?

அந்தக் கிழட்டு மிருகம் மகனைத் தூண்டி விடுறான். அவனும் தகப்பன் பேச்சைக் கேட்டு ஆடுறான்—என்னை ஒதுக்கி வைக்கிறாங்களாம். அவ்வளவு லேசுல நடந்துருமா என்ன! ஏழாவது முதலாளி வர்றாரு பாருங்க. நீதிபதிகூட அண்ணன் தம்பி போல பழகுறதுனால. நான் பேசுறது அவருக்கு புரியாம போயிருமா? அவர் ஒண்ணும் வெய் போல மரமண்டை இல்லே.

வெய் என்ன சொல்றாரு 'பிரிஞ்சு போ, பிரிஞ்சு போன்னு' சொல்றாரு. ஏழாவது முதலாளி கிட்ட நான் நடந்தது எல்லாம் சொல்றேன். யார் சொல்றது சரின்னு அவர் சொல்லட்டும்" அய் கு புலம்பித் தீர்த்து விட்டாள்.

பா-சனுக்கு புரிந்து விட்டது. வாயை மூடிக் கொண்டான்.