2006ம் ஆண்டு சீன இந்திய நட்புறவு ஆண்டாக கொண்டாடும் வகையில் நேயர்களான எங்களை கட்டுரை எழுத ஆர்வத்தை ஏற்படுத்தியதை எண்ணி மனம் மகிழ்கிறேன்.
மக்கள் தொகையில் சீனா முதலிடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்தையும் பெற்றுத் திகழ்கின்றன. முதல் இடத்தை பெற்ற சீனாவில் பொருளாதார நிலையிலும் தொழில் வளர்ச்சியிலும் அந்நாட்டு மக்களின் மேம்பாடும் உயர்ந்த நிலையிலும் திகழ்கின்றது. அந்நாட்டின் உழைப்பாளர்களை மதிக்கின்ற வகையிலும்
உழைப்பாளர்களின் வாழ்வு உயர அந்த நாட்டு அரசு பலவிதமான உதவிகளை உழைக்கும் வர்க்கத்தினருக்கு வழங்கி ஊக்கப்படுத்துகின்றது. காய்கறி உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர் அலுவலகங்களில் பணியாற்றுபவர் சுற்றுபுறத்தை தூய்மையாக பராமரிப்போர் ஓட்டலில் பணி புரிவோர் அனைவரும் செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து பணிக்கு முக்கியத்துவம் தருதல் வேண்டும். ஒவ்வொருவரும் செய்யும் தொழிலை மதித்து நடந்தால் தான் வாழ்க்கைத் தரமும் நாட்டின் வளமும் உயர முடியும். வாய்ப்பை பயன்படுத்தினால் வாழ்வில் உயர முடியும் என்பதற்கு உலகப் பொது மறையாம் திருக்குறள் என்ற நூலில் உள்ள குறள் இதோ
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல்.
இரு நாட்டின் தலைவர்களின் ஆலோசனைகளை மதித்தல் வேண்டும். தன் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூறி அறிந்து கொள்ளவும் உரிமை இருக்கின்றது என்பதை உணர வேண்டும். இரு நாட்டு மக்களும் வர்த்தக சம்பந்தமாய் சென்றாலும் சுற்றுலா சம்மந்தமாய் சென்றாலும் நட்புறவோடு வர வேற்று மகிழ்தல் வேண்டும். குறிப்பாக காலத்திற்கேற்ப சூழ்நிலைக் கேற்ப பறவை சிலகாலம் இந்தியா வந்து உணவு தேடிச் செல்வது போல ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்து வருவது போல் நாமும் அன்யோன்யமான முறையில் வர்த்தக மேம்பாட்டை உயர்த்த பாடுபட வேண்டும். கப்பல் வணிகம் மற்றும் விமானம் சர்வீலும் எவ்விதமான பயத்திற்கு ஆளாகாமல் நம்பிக்கையோடு வாழ்தல் வேண்டும். பெருகிவரும் காலச்
சூழ்நிலைகளாலும் புதுப்புது ஆராய்ச்சியின் விளைவால் நாம் தொழில் வளத்தில் மேம்பட வேண்டும். இரு நாட்டு நட்புறவுக்கு என்றும் உறுதுணையாக இருந்திட வேண்டும். தனி மனித வளர்ச்சி என்பது முதலாளித்துவம் அளித்துள்ள எல்லா, வழி முறைகளையும் கையாண்டு பிறருடன் போட்டியிட்டு திறமையை பயன்படுத்தி தன்னைத்தானே வளர்த்துக் கொள்வது முன்னேறுவது உயர்வது எனப்பொருள்படும். தனி மனிதன் தன் திறமையை சமூதாய நலனுக்காக நாட்டின் நலனுக்காக பாடுபடும் வகையில் அமைத்தல் வேண்டும். தொழில் நுட்ப புரட்சியும் அறிவியல் வளர்ச்சியும் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகின்றன. நிர்வாகம் என்பது தனியார் துறை பொதுத் துறை காப்புத் துறை, கூட்டுறவுத் துறை, உள்ளாட்சித் துறை என பல வகைப்படும். எல்லாத் துறைக்கும் ஆட்சி முறைக்கும் பொதுவானது.
ஆனால் இலக்குகளும் நோக்கங்களும் வெவ்வேறாக இருக்கலாம். இவற்றில் பணி புரிகின்ற எல்லோருக்கும் பொறுப்பும் திறமையும் சேவையுணர்ச்சியும் பொது நல நோக்கமும் தேவை. உற்பத்தியான பொருட்கள் சந்தைக்கு கொண்டு சென்று விற்கப்பட வேண்டும். அதுபோல் உற்பத்திக்கு வேண்டிய கச்சாப் பொருட்கள் சந்தையிலிருந்து வாங்கப்பட வேண்டும். தனியார் மயமாதல், உலக மயமாதல் தாராளமயமாதல் என்றும் முழக்கம் ஏற்படுகின்றது. மாற்றுவழி மாற்றுதிட்டம் எனவும் பேசப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் தனிமனித முயற்சி நாட்டின் முன்னேற்றத்திற்கு நாட்டின் நட்புறவுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருகின்றது. கார்ல்மார்ஸ் கூறிய கருத்து ஞாபகத்துக்கு வருகின்றது. மனிதன் மனிதனாக சமுதாயத்துடன் அவன் கொண்டுள்ள உறவு மனித தன்மையுடையதாக நினையுங்கள். அப்பொழுது அவன் அன்புக்கு ஈடாக அன்பையும் நம்பிக்கைக்கு ஈடாக நம்பிக்கையையும் பெறலாம். கலையை கண்டுகளிக்க வேண்டுமானால் நீ கலைபயின்று தேர்ந்தெடுக்கப்பட்டவனாக இருக்க வேண்டும். இரு நாட்டு சமுதாய சிந்தனைகளையும் இரு நாட்டுக் கொள்கைகளையும் மதித்து நட்புறவுக்கு வழிகாட்டியாக செயல்பட வேண்டும்.
|