சுச்சுவான் மாநிலத்தில் வாழும் விலங்குகளின் பிரதிநிதியான பாண்டா பற்றி கூறுகின்றோம். செங்து நகரிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலம், அதாவது பாண்டாவின் வீட்டுக்கு உங்களை அழைத்துச் செல்கின்றோம்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், பாண்டாக்கள் மிகவும் விரும்பும் உணவுகளில் ஒன்றான, மிக அதிக நிலப்பரப்பில் வளரும் ஜியன்சு எனும் ஒரு வகை மூங்கில் இனம் அழிந்துவிட்டது, பாண்டாக்களின் எதிர்கால வாழ்வுக்காக, இந்த மூங்கில்களை மீண்டும் வளர்ப்பதற்காக பணம் திரட்டும் வகையில், சீன இசையமைப்பாளர்கள் முன்பு நீங்கள் கேட்ட இந்த பாடலை இயற்றினர். இப்பொழுது, வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில் இந்த வகை மூங்கில் செழிப்புடன் வளர்கின்றது. இயற்கையில் மிகவும் பழமை வாய்ந்த மிக அரிதான விலங்கான பாண்டாக்கள் மிகவும் இன்பமாகவும் எந்த கவலையின்றியும் வாழ்கின்றன.
சுச்சுவான் மாநிலத்தின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலம், பாண்டாக்கள் முக்கியமாக வாழும் இடங்களில் ஒன்றாகும். எனவே, சுச்சுவான் மாநிலம், பாண்டாக்களின் ஊர் என கருதப்படுகின்றது. சுச்சுவான், ஷென்சி மாநிலங்களிலும் கான்சு மாநிலத்தின் ஒரு பகுதியிலும் உள்ள மலைப் பிரதேசங்களில் தான் காட்டு பாண்டாக்களை மக்கள் காண முடியும். எனவே, சீன மற்றும் வெளிநாட்டு பயணிகள், பாண்டாக்களை நேராக பார்க்க வேண்டுமானால், அவர்கள் இயற்கை பாதுகாப்பு மண்டலத்திலுள்ள சீனப் பாண்டாத் தோட்டத்துக்கு வர வேண்டும். இந்த மண்டலத்தின் பொறுப்பாளர் சாங் லி மிங் கூறியதாவது-
பாண்டாக்கள் தொடர்ந்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு உதவி செய்து, உலகில் பாண்டாவை விரும்புவோருக்கு, பாண்டாவை நேரில் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதும், உயிரின வாழ்க்கை சூழலை பாதுகாப்பது ஏன் என்பதை பயணிகளுக்கு தெரிவிப்பதும் எங்கள் நோக்கமாகும் என்றார்.
நீண்டகாலமாக, பாண்டாவின் உருண்டையான உடல், மென்மையும் வேடிக்கையுமான செயல்பாடு, வெள்ளையும் கருப்பும் கலந்த தோற்றம் ஆகியவை மக்களை மிகுதியும் கவர்ந்து வருகின்றன. சீனத் தேசிய பாண்டா தோட்டத்தில் 100க்கும் அதிகமான பாண்டாக்கள் வளர்க்கப்படுகின்றன. இங்கு பல பாண்டாக்கள் வெளியே விளையாடுகின்றன, அவற்றில் சில, சலுக்கல் ஏணியில் விளையாடுகின்றன. சில, சூரிய ஒளியில் பாறையின்மீது சார்ந்திருக்கின்றன. வேறு சில, மரங்களில் ஏறி, கஷ்டமான விளையாட்டுகளில் ஈடுபடுகின்றன.
1 2
|