சீனாவில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சாங் யீ மோ தயாரிக்க செய்கின்ற Curse of the Golden Flower என்னும் திரைப்படம் அண்மையில் சீனா முழுவதிலும் திரையிடப்பட்டது.
திரைப்படத்தின் கதாநாயகி குங் லி ஆவார். 10 ஆண்டுகளுக்கு பின் சாங் யி மோ குங் லி இருவரும் ஒத்துழைப்பில் மேற்கொள்கின்ற ஒரு திரைப்படம் இது வாகும்.
1986ம் ஆண்டு, சீனாவுன் மத்திய நடப்புக்க கல்லூரியின் 2வது வகுப்பில் பயின்று கொண்டிருந்த குங் லிக்கு தமது வாழ்க்கையை மாறஅறும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சிகப்பு மக்காச் சோளம் என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் சாங்யே மோ தீர்மானித்தார். இந்தத் திரைப்படம் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும், மாபெரும் வெற்றி பெற்றது. 39வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் தங்கக்கரடி பரிசு இத்திரைப்படத்துக்கு கிடைத்தது. இதன் விளைவாக, சாங் யீ மோவும் குங் லியும் புகழ்பெற்றத் தொடங்கினர். பின்னர். சாங் யீ மோ, அடுத்தடுத்து, ஜூடோ, பெரிய சிவப்பு விளக்கு, சியூ சியு ஆகிய மூன்று திரைப்படங்களை தயாரித்தார். திரைப்படங்களின் கதாநாயகி குங் லி ஆவார், பக்குவத்துடன் கூடிய நடிப்புத் திறனால், பல்வேறு தனிச்சிறப்பு வாய்ந்த சீனப் பெண் கதாபாத்திரங்களில் குங் லி நடத்தார். சிறப்பான நடிப்பு திறனால், 47வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் தலைசிறந்த நடிக்கை என்ற பரிசை அவர் பெற்றார். சீனப் பெரும் சில பகுதியைச் சேர்ந்த ஒரு நடிகை, முதல் முறையாக சர்வதேச பரிசு பெற்றது இதுவேயாகும். 1996ம் ஆண்டு, அவர் ஹாலாவூட் திரை முன்னேறிய படங்களில் நடிக்கத் துவங்கினார். ஆனால், துவக்கத்தில், உரிய கதாபாத்திரத்தை அவர் நாடவில்லை. அவர் கூறியதாவது.
நல்ல திரைப்படக் கருப்பொருள் இல்லாவிட்டால், நான் ஓய்வு எடுப்பேன். ஓய்வு நேரத்தில் நான், ஆற்றல் சேமிக்கிறேன்.
திரைப்படங்களில் நடிப்பில் ஈடுபடும் போது, திரைப்பட மற்ரும் ஒளித்துறையில் குங் லியின் செல்வாக்கு குறையவில்லை. இது தவிர, சர்வதேச திரைப்பட துறை, இந்த சீன தனிச்சிறப்பு வாய்ந்த நடிகை மீது முக்கிய கவனம் செலுத்தியது. 1997ம் ஆண்டு, கானா திரைப்பட விழாவின் நடுவராக அவர் நியமிக்கப்பட்டார். 2000ம் ஆண்டு முதல், பெர்லின் திரைப்பட விழா, வெனிஸ் திரைப்பட விழா, டோக்கியோ சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றின் நடுவர் குழுவின் தலைவராக அவர் பொறுப்பேற்றுள்ளார். சர்வதேசத் திரைப்படத் துறையில், குங் லி, சீனாவின் திரைப்பட கலையின் ஒரு பிரதிநிதியாக மாறியுள்ளார். திரைப்பட விழாவின் நடுவர் குழுவின் தலைவர் என்னும் பதவி பற்றி பேசுகையில், அவர் கூறியதாவது.
|