• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-19 14:04:50    
2011 உலக பல்கலைக்கழகங்களுக்கிடை விளையாட்டு போட்டிகள்

cri

26வது உலக பல்கலைக்கழங்களுக்கிடை விளையாட்டுப் போட்டிகள் 2011ம் ஆண்டு தென் சீனாவின் ஷன்சன் நகரில் நடைபெறும். அண்மையில் டூரின் நகரில் சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுக் கூட்டமைப்பு இதை அறிவித்தது.

2011ம் ஆண்டின் 26வது உலக பல்கலைக்கழங்களுக்கிடை விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமைக்காக விண்ணப்பித்து இறுதிகட்ட போட்டியாளர்களாக நின்ற தைவானின் காவ்ஷியுங், போலந்தின் போஸ்னான், ரஷ்யாவின் கஸன், ஸ்பெயினின் முர்சியா, சீனாவின் ஷன்சன் ஆகிய நான்கு நகரங்களில் ஷன்சன் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த 26வது உலக பல்கலைக்கழங்களுக்கிடை விளையாட்டுப் போட்டிகள் ஷன்சன் நகரில் நடைபெறுவது நகரின் மேம்பாட்டுக்கு துணைபுரியும் என்பதில் இந்நகரின் அதிகாரிகளும் மக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பல உலகளாவிய, சர்வதேச ரீதியிலான போட்டிகள் சீனாவில் அண்மை எதிர்காலத்தில் நடைபெறவுள்ளன என்ற நிலையில் இந்த 26வது உலக பல்கலைக்கழங்களுக்கிடை விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பும் உரிமையும் கிடைகுமா என்ற சந்தேகம் ஷன்சன் நகர பிரதிநிதிகளுக்கு இருந்தது. ஆனால் தற்போது இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது அவர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

பெண்கள் கால்பந்து உலக கோப்பை, 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள், 2009ம் ஆண்டில் பல்கலைக்கழகங்களுக்கிடை குளிர்கால விளையாட்டு போட்டிகள், 2010ம் ஆண்டில் குவாங்சோவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் என பல சர்வதேச விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைபெறவுள்ளன.