திபெத் வெளிநாட்டு வர்த்தகம்
cri
2006ஆம் ஆண்டு சீனத் திபெத்தின் வெளிநாட்டு வர்த்தகம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மொத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தகத் தொகை 29 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டி, 2005ஆம் ஆண்டில் இருந்ததை விட 40 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது.
இன்று லாசா நகரில் நடைபெற்ற திபெத் வணிக பணிக்கூட்டத்தில் பேசிய திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வணிக அலுவலகத்தின் தலைவர் Tan Yun Gao, ச்சின்காய் திபெத் ரெயில் பாதையின் பயன்பாடு, சீன-இந்திய நெதுலா நுழைவாயிலின் எல்லை வர்த்தகம், துன் சின் காங் தற்காலிக எல்லை வர்த்தக சந்தை ஆகியவை, திபெத்துக்கும் வெளிப்புறத்துக்கும் இடையிலான திறப்புப் பணிக்கு பரந்த அளவிலான வாய்ப்புகளை வழங்கியுள்ளன என்றார்.
2007ஆம் ஆண்டு, திபெத்தின் மொத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தக தொகை 30 கோடி அமெரிக்க டாலர் என்ற இலக்கு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
|
|