• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-22 20:15:46    
இஞ்சி இடுப்பழகி

cri

திடகாத்திரமான உடலமைப்பு, விம்மிப்புடைத்து நிற்கும் தோள்கள், அகன்ற மார்பு இவையெல்லாம் ஆண்களுக்கு அழகின் அம்சங்களாய் கூறப்படுபவை. உத்தியோகம் புருஷ லட்சணம், வீரம் ஆண்மைக்கழகு என்று நாம் கூறக்கேட்டிருப்போம். ஆண்மகன் உழைத்து பொருள் ஈட்டவேண்டும், வேலையின்றி சோம்பித்திரியக்கூடாது. எந்தச் செயலையும் துணிவுடன் செய்யவேண்டும். வறுமை நினைத்து பயந்துவிடாமல், திறமை இருப்பதை மறந்துவிடாமல் தைரியமாகச் செயல்படவேண்டும். வீரத்தின் அடையாளமாய் நிற்கவேண்டும். இவையெல்லாம் ஆண்களுக்கு அணிசேர்க்கும் அம்சங்களாக குறிப்பிடப்படுகின்றன.

பெண்களுக்கும், தாய்மை, குடும்பத்தின் மீதான ஈடுபாடு, பாசம் கற்பு நிலையெல்லாம் அவளது குணாம்சங்களாகக் கூறப்பட்டு அவளுக்கு அழகு சேர்ப்பவையாக குறிப்பிடப்படுகின்றன. உடலமைப்பின்படி பெண்களின் அழகைச் சொன்னால், பொலிவான முகம், கயல் விழிகள், நீண்ட கூந்தல், உடுக்கை போன்ற உடலமைப்பில், திரட்சியான ஆனால் கச்சிதமான முன்னழகும், பின்னழகும் தாங்கி நிற்கும் கொடியிடை என்று பெண்களின் அழகு கூறப்படுகிறது. அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் அதற்கு ஆண், பெண் அழகு பற்றி கூறவேண்டும் என்ற கேள்வி நிச்சயம் உங்களுக்கு எழும். ஆனால் அண்மையில் டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்ரும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் இந்த அறிவியல் உலகம் நிகழ்ச்சிக்கு கருவாக அமைந்துள்ளன. அந்த ஆய்வின் விபரங்கள் இதோ உங்களுக்காக.

மனித வரலாற்றில் பெண்களின் அழகு போற்றிப் புகழப்பட்டு வருகிறது. ஆனல் பெண்களுக்கு அழகு தருவது எது என்பதை அறுதியிட்டு கூறுவது இயலாது என்பதும், அழகு என்பது அவ்வப்போதைய நாகரீக வளர்ச்சி, தேசிய இன கலாச்சார அமைவு மற்ரும் பழக்கவழக்கங்களைப் பொறுத்தே எமைகின்றது என்பதும், அழகு என்பது பார்ப்பவரின் கண்களில் இருக்கிறது என்பதுமே பரவலான நம்பிக்கை. பண்டைய இங்கிலாந்தில் பெண்களின் முகத்தில் வாயின் தோற்றம், உதடுகள் சிறியதாக இருப்பது அழகாக கருதப்பட்டது. ஆனால் தற்போது பெண்கள் உதட்டுச் சாயத்தை பூசி அகன்ற உதடுகளாய் தோற்றம் கொள்ளச்செய்கின்றனர், காரணம் தற்போதைய நிலைப்படி அகன்ற விரிந்த உதடுகள் அமைந்த வாய் அழகாக கருதப்படுகிறது. பாதங்கள், கழுத்து, தலைமுடியின் அலங்காரம், முகல் பொலிவுடன் தோற்றமளிக்க செயற்கையான பூச்சு இவையும் கூட ஒரு காலக்கட்டத்தில் அழகு மிளிரும் அம்சங்களாக கருதப்பட்டன.

ஆனால் இன்றைக்கு ஓரளவுக்கு பெண்களின் சமூக மெம்பாடு, புத்திசாலித்தனம், வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் இவையெல்லாம் அழகு அணிகலன்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆக பெண்களின் அழகு என்பதற்கு தர நிர்ணயம் ஏதும் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது, எப்போது ஏற்றுக்கொள்ளப்படும் அழகின் அம்சமாக எதையும் அறுதியிட்டு அளவுகோலாக்க முடியாது என்றே நமக்குத் தோன்றுகிறது. ஆனால் பரிணாம வளர்ச்சி உளவியலாளர்கள் இதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர்.

அவர்களை பொறுத்தவரை நாகரீகத் தோற்றமளிப்பு, பேஷன் இவையெல்லாம் வலுவான ஒரு ஆற்றலின் முகமூடி போன்றவை. நமது மரபணுக்களைப் போல் மாற்றம்பெறாமல், நீண்டகாலமாய் தங்கி நிற்கும் ஆற்றல் என்கின்ரனர். பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் தந்தை டார்வினின் கூற்றுப்படியான, உயிர்வாழ்வு போராட்ட உணர்வு மற்றும் மரபணுத்தகுதியே அந்த ஆற்றல். ஆக இந்த திசையில் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வ்ர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலர்கள் 300 ஆண்டுகால ஆங்கில இலக்கியங்களையும், மூன்று ஆசிய இலக்கிய படைப்புகளையும் ஆய்வு செய்து, வரலாற்றில் பெண்களின் உடலமைப்பில் எதெஇயெல்லாம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், அழகின் வெளிப்பாடாய் குறிப்பிடுகிறார்கள் என்று கண்டறிந்தனர்.