• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-22 09:28:21    
குளிர்கால ஆசிய விளையாட்டு போட்டிகள்

cri

சீனாவின் ஜிலின் மாநிலத்தின் சாங்சுன் நகரில் வருகின்ற ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 நாள் வரை 6வது குளிர்கால ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த குளிர்கால ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்தும் நாடான சீனா, மொத்தம் 261 பேர் கொண்ட பிரதிநிதிக்குழுவை பங்கேற்கச் செய்ய முடிவெடுத்துள்ளது.

81 விளையாட்டு வீரர்களும், 79 வீராங்கனைகளும் உள்ளடங்கிய 261 பேர் கொண்ட சீனாவின் பிரதிநிதிக்குழுவின் அளவு, பங்கேற்கும் மற்ற நாடுகள் மற்றும் பிரதேசங்களின் குழுக்களின் அளவைவிட பெரியது. போட்டிகளில் இடம்பெறும் 47 வகையான விளையாட்டு போட்டிகளிலும் சீனா பங்கேற்கும். தென்கொரியா, ஜப்பான், கசகஸ்தான் நாடுகளும் அதிக எண்ணிக்கையில் தங்களது வீரர் வீராங்கனைகளை அனுப்பி இந்த போட்டியில் பதக்கங்களை பெற முயற்சிக்கும். தென்கொரியா 151 பேர் கொண்ட பிரதிநிதிக்குழுவையும், ஜப்பான் 137 பேர் கொண்ட பிரதிநிதிக்குழுவையும், கசக்ஸ்தான் 134 பேர் கொண்ட பிரதிநிதிக்குழுவையும் அனுப்பவுள்ளதாக அறியப்படுகிறது.