இன்றைய சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் இறாலும் பச்சைப் பட்டாணியும் இடம் பெறும் உணவு வகையைக் காண இருக்கின்றோம். பட்டணி சுண்டல் தெரியும். அதனுடன் இறால் என்பது புதிய அனுபவம். சீனாவின் தனிச்சிறப்பு மிக்க உணவு வகை இது. சைவ, அசைவ கலப்பு உணவாகும் போல் தோன்றுகின்றது.
சலம். ஆமாம். தேவையானவற்றின் பட்டியல் இதோ, வேக வைத்த பச்சைப் பட்டாணி அரை கோப்பை இறால் 250 கிராம் வெங்காயம், இஞ்சி, உப்பு சிறிதளவு முட்டையின் வெள்ளைப் பகுதி மக்காச்சோள ஸ்டார்ச் ஒரு தேக்கராண்டி இறால் தான் விலை அதிகமானது. மற்றபடி, செலவு குறைவாகவே இருக்கும். ஆமாம். இனி. செய்முறைக்கு வருவோம். முதலில், இறாலை நன்றாக்ச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் வயிற்றில் உள்ள வலிழைமத் தளையை அகற்ற வேண்டும். பிறகு, உப்பு, முட்டையின் வெள்ளைப் பகுதி, மக்காச்சோள ஸ்டார்ச்சுடன் இறைலைக் கலந்து, சில நிமிடங்கள் அப்படியே இருக்கவிட வேண்டும். இப்போது, வாணலியை அடுப்பின் மீது வைத்து, சிறிதளவு சமையல் எண்ணெயை ஊற்றவும். அதில் இறைலைக் கொட்டி, மிதமான சூட்டில் வேகவிடவும். இறாலின் நிறம் மாறும் போது, எண்ணெயிலிருந்து எடுத்து விடவும்.
சிறதளவு எண்ணெயில், வெங்காயம், இஞ்சித் துண்டுகளைக் கொட்டி, வதக்க வேண்டும். அதன் பிறகு, இறாலை அதில் சேர்த்து, பச்சைப் பட்டாண்யைக் கொட்டி, நன்றாக்க் கிளற வேண்டும். இப்போது, தட்டுக்கு மாற்றிக் கொண்டால் இறால் பச்சைப் பட்டணி வறுவல் தயார். நன்கு ருசிக்கும் போல் தோன்றுகின்றதே. கண்டிப்பாக. நேயர்கள். இதைத் தயாரித்து, ருசிக்கலாம். வாணி. என்ன நேயர்களே. இன்னொரு எளிய, ஆனால் சத்தான சீன உணவு வகை உங்கள் வீட்டில்.
|