• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-23 16:10:04    
சமூக மீட்புதவி அமைப்பு

cri

சமூக மீட்புதவி அமைப்பான செஞ்சிலுவைச் சங்கம் அகதிகளுக்கும் இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மீட்புதவி வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றது. மனித நேய மீட்புதவி நடவடிக்கைகளிலும் அது சுறுசுறுப்பாக பங்கெடுத்து வருகின்றது. சீன செஞ்சிலுவை சங்கம் 1904ம் ஆண்டு நிறுவப்பட்டது. தற்போது அதற்கு 31 மாநில நிலைக் கிளைகளும் ஹாங்காங் மக்கௌ ஆகிய இரண்டு சிறப்பு நிர்வாகப் பிரதேசத்து கிளைகளும் உள்ளன. தவிரவும் அதற்கு 70 ஆயிரத்துக்கும் அதிகமான அடிமட்ட நிறுவனங்களும் உள்ளன. இப்போது அதைப் பற்றி பார்ப்போம். அறவிவிப்பாளர்........

தென் கிழக்கு சீன கடலோரசத்திலுள்ள பூஃச்சியன் மாநிலத்தின் சிசு நகரத்தின் சிங்சான் நிர்வாக வட்டத்தில் அரசு சாரா செஞ்சிலுவைச் சங்க அடிமட்ட நிறுவனம் ஒன்று உள்ளது. அது பொது நல துறையில் ஆர்வமிக்க பாமர மக்களால் சுய விருப்பத்துடன் தோற்றுவிக்கப்பட்டதாகும். இதனால் பொது மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் அது பெற்றுள்ளது.

இவ்வடத்தில் மக்கள் தொகை 10 ஆயிரத்துக்குக் குறைவாக உள்ளது. ஆனால் வெளிநாடுகளில் வாழும் சீனர்களின் மக்கள் தொகை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நபர்வாரி ஆண்டு வருமானம் 8 ஆயிரம் யுவானாகும். பொருளாதாரம் ஒப்பீட்டளவில் வளர்ச்சி கண்ட இந்த வட்டத்தில் மக்களின் வாழ்க்கை கொஞ்சம் வசதியாக இருந்த போதிலும் நோய் அல்லது இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் சிலர் சங்கட நிலையில் சிக்கியுள்ளார்கள். சமூக உதவியும் அன்பும் அவர்களுக்கு தேவைப்படுகின்றன.

1999ம் ஆண்டு ஒரு நாள் இவ்வட்டத்தில் போட்டோகாப்பி எடுக்கும் கடைச் சொந்தக்காரர் ஊ ச்சி சாங் ஒரு நிகழ்ச்சியால் மன முருகினார். தமது தாயாருக்கு சிகிச்சை செய்வதற்கா பிலிப்பைன்ஸில் வாழும் தமது உற்றார் உறவினருக்கு உதவி கேட்கும் கடிதம் எழுதுமாறு அவரைக் கேட்டுக் கொண்டார். சாதாரண நாட்களில் மண் எண்ணெய் விளக்கை எரிப்தற்கு கூட அவரிடம் பணம் கிடையாது என்பதை இந்தக் கடைக்காரர் பின்னர் தெரிந்து கொண்டார். இது அவர் மனதில் ஆழப் பதிந்து விட்டது. இதனால் அன்பு காட்டும் நிதியம் தோற்றுவிக்கும் எண்ணம் அவருக்குச் சோன்றியது. அவர் கூறியதாவது.

நான் பல முதியோருடன் பழகி வருகிறேன். தமது உற்றார் உறவினர்களிடம் பண உதவி கேட்கும் பொருட்டு பிலிப்பைன்ஸ் ஹாங்காங் ஆகிய இடங்களில் வாழும் தமது உறவினருக்கு கடிதம் எழுதுமாறு அவர்கள் அடிக்கடி என்னைக் கேட்டார்கள். இவர்களில் சிலர் நோய் அல்லது இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள். பொருளாதார வளர்ச்சியடைந்த பிரதேசங்களில் ஒரு பகுதியினருக்கு மற்றவரின் உதவி தேவைப்படுகின்றது என்பதை அப்போது தான் நான் அறிந்து கொண்டேன் என்றார்.

அவருடைய எண்ணம் இவ்வட்டத்தில் ராணுவ சேவையிலிருந்து விலகிய படைவீரர் சியூ யு சாங்கின் எண்ணத்துடன் ஒத்துப் போகின்றது. இவர்களுடைய முயற்சியுடன் 2001 ஜனவரி 17ம் நாளன்று சிங்காங் வட்ட செஞ்சிலுவை சங்கம் நிறுவப்பட்டது. சிறிது காலத்துக்கு பின் அவர்கள் சில பெரிய செயல்களைச் செய்தார்கள்.