• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-24 09:05:45    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: அன்பு மணிகண்டன். தமிழில் அழகாக எழுதிய உங்கள் கடிதம் கண்டு மகிழ்கிறோம். தொடர்ந்து உங்கள் கல்வியில் கவனம் செலுத்தி உங்கள் எண்ணப்படியே ராணுவத்தில் இணைந்து நாட்டுக்கும் வீட்டுக்கும் சேவை புரியும் நல்ல மகனாக இருக்கவேண்டும் என்று வாழ்த்துகிறோம். தொடர்ந்து எமது நிகழ்ச்சிகளை கேட்க மறக்க வேண்டாம்.

க்ளீட்டஸ்......ஆர். வெங்கடேசன் எழுதிய கடிதம். மேற்கு சீனவின் முத்து என்ற பொது அறிவுப்போட்டிக் கட்டுரைகளை வாசிக்க கேட்டு பயன் பெற்றோம். மேற்கு சீனாவை பற்றி தெளிவாக அறிந்துகொள்ள முடிந்தது. காஷ் நகர நிலப்பரப்பு எவ்வளவு, அங்குள்ள மக்கள் தொகை,அவர்களில் உய்கூர் இனத்தவர் எத்தனை விழுக்காடு ஆகியவற்றை அறிந்தோம். காஷ் நகர இஸ்லாமிய திருகுர்ரான் பள்ளிக்கு சீன அரசு 50 லட்சம் ஒதுக்கீடு செய்தது. 2004ம் ஆண்டில் 1500 பேர் குழுவாக மெக்காவுக்கு புனிதப் பயணம் செய்தது, தன்னாட்சி பிரதேசத்தின் தலைமை பதவிகளில் பல பெண்கள் இருப்பது என்பதையெல்லாம் இந்த கட்டுரைகள் தெளிவாக விளக்கின என்று எழுதியுள்ளார்.

கலை: வணக்கம் நேயர்களே. இன்றைய நேயர் நேரம் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. பொங்கல் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடியிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இனி நிகழ்ச்சியின் முதல் கடிதமாக, ஈரோடு காளியப்பம்பாளையம் ராகம் பழனியப்பன் எழுதிய அக்டோபர் 3ம் நாள் ஒலிபரப்பான செய்தித் தொகுப்பு பற்றிய கடிதம். பாலஸ்தீன நாட்டில் உள்நாட்டு மோதல் பற்றிய செய்தித் தொகுப்பு கேட்டேன். பாலஸ்தீனத்தில் இன்றளவும் தீவிரவாத மக்களின் போர் குணம் மாறாமல் உள்ளது. அப்பாவி பாலஸ்தீன மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டிய இந்த பாலஸ்தீன அமைப்புகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது இந்நாட்டை அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள், அதைப்போலத்தான் பாலஸ்தீனத்திலான உள்நாட்டு மோதல் என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து விழுப்புரம் ஆலத்தூர் ஜி. பாண்டுரங்கன் எழுதிய கடிதம். கடந்த நவம்பர் திங்கள் 24ம் நாள் தமிழ்ப்பிரிவின் தலைவர் திருமதி கலையரசி விழுப்புரம் வருகை தந்து விழுப்புரம் மாவட்ட நேயர்களைச் சந்திதுரையாடியது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. இச்சந்திப்பு பற்றி எங்கள் மாவட்டத்தின் செய்தியேடுகளில் பார்த்து மக்கள் பெருமையாக பேசிக்கொண்டனர், அதற்காக சீன வானொலியின் பிரதிந்திக்குழுவுக்கு நன்றிகள் என்று எழுதியுள்ளார்.