• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-24 10:19:30    
விவாக ரத்து 2

cri

படகில் அமைதி. தண்ணீரில் துடுப்பின் சலசலப்பு மட்டுமே ஒலித்தது. சுவாங் மு தமது பைப்பை எடுத்து, புகையிலையை திணித்தார்.

எதிர்ப்புறமாக, பாசனுக்கு அடுத்தபடியாக அமர்ந்திருந்த ஒரு கொழுத்த மனிதன், தனது இடுப்பில் தடவித் தேடி, ஒரு தீக்கல்லை எடுத்து உரசி பற்ற வைத்தான். அதை சுவாங் மு வின் பைப்புக்கு நீட்டினான்.

அவனுக்கு சுவாங் மு தலையசைத்தபடியே நன்றி கூறினார்.

"நாம இப்போதான் முதல் தடவையா சந்திக்கிறோம். ஆனாலும் உங்களைப் பத்தி நிறையக் கேள்விப்பட்டுருக்கேன்" என்றான் குண்டு மனிதன். இந்தக் கடலோரத்துல மு மாமாவை தெரியாதவங்க யாராவது இருக்காங்களா? அந்தச் சின்னப் பயல் ஷி, ஒரு விதவை கூட தொடுப்பு வச்சிருக்காங்கிறது எங்களுக்கும் தெரியும். போன வருசம் உங்களோட ஆறு மகன்களையும் கூட்டிக்கிட்டுப் போயி, அவன்வீட்டு சமையலறையை இடிச்சுத் தள்ளினீங்களே, அதை யாரும் தப்புனு சொன்னாங்களா? இல்லியே! எல்லார் வீட்டு வாசல்களும் உங்களுக்காகத் திறந்துருக்கு. நீங்க தைரியமா போங்க "அவங்களைக் கண்டு எதுக்குப் பயப்படணும்?"

"இந்த மாமாவை எனக்கு முன்னப்பின்னே தெரியாது. ஆனா உண்மையிலேயே விடியம் தெரிஞ்சவரா இருக்காரு" என்றாள் அய் கு.

"என் பெயர் வேங் தி குயி" என்று பதில் சொன்னான் குண்டு மனிதன்.

"என்னை அவ்வளவு லேசுல அவங்க விரட்ட முடியாது. ஏழாவது முதலாளியோ, எட்டாவதுமுதலாளியோ, யார் வந்தாலும் சரி. எல்லோரையும் கொன்றுபோட்டு, அந்தக் குடும்பத்தையே சீரழிச் சுட்டுத்தான் விடுவேன். வெய் நாலு தடவை சமாதானம் பேச வந்தாரு. என்ன ஆச்சு? அவங்க கொடுத்த செட்டில் மென்ட் பணத்தைப் பார்த்து அப்பாவே கோபத்துல கொதிச்சுப் போயிட்டாரு" மு தாத்தா தனக்குள்ளே மெதுவாக சபதம் எடுத்துக் கொண்டார்.

"மு தாத்தா, போனவருசம் ஷி வீட்டு ஆளுங்க வெய்க்கு பெரிய விருந்தே வச்சாங்களே" என்றான் நண்டு மூஞ்சிக்காரன்.

"வைக்கட்டுமே, விருந்து வச்சு ஒருத்தரை விலைக்கு வாங்கிற முடியுமா? அவர வெளிநாட்டு விருந்துக்கு அனுப்பனப்போ என்ன ஆச்சு? அறிஞர்கள் எப்போதுமே நீதியை விட்டுத்தர மாட்டாங்க. எல்லாரும் சேர்ந்து ஒருத்தனை மிரட்டுனாக்கூட அவன் குடிகாரனோ, இல்லியோ, அறிஞர்கள் அவனுக்காகத்தான் பரிஞ்சு பேசுவாங்க. போன வருசக் கடைசியில, நம்ம கிராமத்து மனிசன் யுங், பீகிங்குல இருந்து வந்தாரே!அவர் உலகத்தையே சுத்திப் பார்த்தவர். நம்ம பட்டிக்காட்டு ஆளுங்களைப் போல இல்லே. பீகிங்குல, குவாங் அம்மையார் இருக்காங்களாம். அவங்கதான்" என்று வேங் தி குயி சொல்லி முடிக்குமுன்

"வேங் துறை வந்தாச்சு. யாராச்சும் இறங்கணுமா?" படகுக்காரன் கத்தினான்.

"நான் இறங்கணும்" குண்டு மனிதன் தனது பைப்பை எடுத்தபடியே கேபினைவிட்டு வெளியே வந்து, படகு கரையைத் தொடுவதற்கு முன்பே குதித்து விட்டான்.

"ஐயா, மன்னிச்சுக்கோங்க" மற்ற பயணிகளை நோக்கி கெஞ்சுவது போல தலையசைத்தான்.