• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-25 14:32:07    
சீன இந்திய நட்புறவுக்கான கட்டுரை போட்டி

cri

எழுதியவர் காஜாமலை திருச்சி ஜி.பி.ஜனனிஸ்ரீ்

நான் என்ன செய்ய வேண்ம்
பள்ளி மாணவி என்ற முறையில் என்னை விட இளைய வகுப்பு, மூத்த வகுப்பு ஆகிய சக மாணவிகள் பலருக்கும் சீனாவின் சிறப்புகளை சொல்ல வேண்டும். தலைமை ஆசிரியர் வகுப்பு ஆசிரியர்கள் பலருக்கும் சீனாவைப் பற்றி பாடங்களில் இடம் பெறாத அதே நேரம். தமிழ் பிரிவில் இடம் பெறும் தகவல்களை கூற வேண்டும். மாணவிகளை பொறுத்தளவில் 9 ஆண்டு கட்டாயக் கல்வி அதன் சிறப்பு விளக்க வேண்டும்.

ஆண்டு விழாக்களில் சீன இந்திய நட்புறவு தொடர்பாக பேச்சு போட்டி கட்டுரைப் போட்டியில் பங்கேற்று இப்போட்டிக்களில் பரிசுகள் எனக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நான் இந்திய குடிமகள என்ற உணர்வுடன் சீனாவின் வளர்ச்சி, சீன மக்களின் பண்பாடு ஆகியவற்றை விளக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பல மாணவிகள் என்னை தினமும் சூழ்ந்து கொண்டு இன்று சீனாவில் என்ன சிறப்பு புதிய கண்டுபிடிப்புகள் என்ன என்று கேள்வி மேல் கேள்விகள் கேட்க வேண்டும். எனது பள்ளி மாணவிகள் அனைவரும் சீனாவை பற்றி தெரிந்து கொள்ள ஜிபிஜனனிஸ்ரீ யை கேளுங்கள். விளக்கமாக கூறுவார் என்று சொல்லும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வளவு தகவல் எப்படி உனக்கு கிடைக்கிறது. எனக்கும் சீன வானொலி அலைவரிசை ஒலிபரப்பாகும் நேரத்தை தெரியப்படுத்து என மற்றவர்கள் கேட்க வேண்டும்.

 

நான் படிக்கும் பள்ளியில் பலவித கல்வி பிரிவுகள் உயர் கல்வி, ஆசிரியர் பயிற்சி, செவிலியர் பயிற்சி பிரிவுகளும் உள்ளன. அனைவருமே என்னை பாராட்ட வேண்டும். இவற்றையெல்லாம் அறிந்த பள்ளித் தலைமை "சாதனை மாவி"என எனக்கு விருது வழங்க வேண்டும். சீன இந்திய நட்புறவு வளர்த்த மாணவி என புகழ வேண்டும். இதெல்லாம் நான் செய்ய வேண்டும். இவை அனைத்தும் நடைபெற வேண்டும். நடைபெற வேண்டும் என்ற ஆவல் நிறைய உண்டு.
நான் என்ன செய்ய முடியும்

எனது மனதில் எண்ணற்ற சாதனை புரிய வேண்டும் என்ற ஆவல் இருந்த பொழுதும் எனது தந்தை திருச்சி காஜாமலை ஜி பிரபாகரன் அவர்களுடன் நமது சீ.வ.தமிழ் பிரிவு நிகழ்ச்சிகளை கேட்பதன் காரணமாகவும் அவ்வப் பொழுது தாங்கள் அனுப்பும் வாழ்த்து அட்டைகள், காகித கத்தரிப்பு ஆகியவற்றை சக மாணவிகளிடம் கொடுத்து விட்டு அவர்களின் முகத்தை பார்ப்பேன் மகிழ்ச்சியோடு என்னைப் பார்ப்பார்கள். அந்த பார்வையில் நான் சீனாவினை பார்க்கிறேன். பெய்சிங் ரிவ்யு இதழை அவர்களிடம் காண்பித்து சீன நாட்டு இதழ் சீனாவின் சாலைகளை கட்டிடங்களை சீனப் பெருஞ்சுவரை பாருங்கள் என்பேன். மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். இச்செய்தி நாளடைவில் ஆசிரியர்களிடம் பரவியது. அவர்களும் காகித கத்தரிப்பு வண்ண அட்டைகளை கேட்டு பெற்றுக் கொண்டார்கள். மேலும் தலைமை ஆசிரியை அவர்களுக்கும் இச்செய்தி கிடைத்து விட்டதால் என்னை ஒரு நாள் அழைத்து மேற்கண்டவற்றை தனக்கும் வழங்க வேண்டு்ம் என்றார்கள். அதன் படி அவர்களிடம் கொடுத்தேன். இதில் சிறப்பு என்ன வென்றால் பள்ளியை பார்வையிட மூத்த அதிகாரி ஒருவர் ஒருமுறை வருகை புரிந்த பொழுது தலைமை ஆசிரியை மேசை மீது நான் கொடுத்த காகித கத்தரிப்பை அழகாக வைக்கப் பட்டிருந்தது. அதனை பார்த்த பின் அவர் அது கிடைத்த விவரம் பற்றி அறிந்து உடனடியாக இதனை பெரிய அளவில் நகல் எடுத்து இந்த அறையில் இடம் பெறச் செய்யுங்கள் என்றார். சில நாட்களில் அந்த காகித கத்தரிப்பு பெரிய அளவில் தயார் செய்து அந்த அறையில் பொருத்தி விட்டார்கள். இன்றும் எமது பள்ளி தலைமை ஆசிரியை அறையில் அழகாக காட்சியளிக்கின்றது. இச்சம்பவத்தை விட மகிழ்ச்சிகரமான செய்தி வேறு உண்டா?என்ற அளவில் ஆனந்தம் அடைந்தேன். ஒரு பள்ளி மாணவி என்ற முறையில் ஒரு மாவட்ட மன்றம் செய்யக் கூடிய அளவு சாதனையினை நான் செய்திருக்கிறேன் என்று பெருமைபடுகின்றேன்.

முடிவுரை
நான் என்ன செய்ய வேண்டும் என் நினைத்தேனோ அதனை என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்காக கடலில் செல்லும் படகு போல தமிழ் பிரிவு எனும் கடலில் சீன இந்திய நட்புறவு எனும் படகை செலுத்தி நான் கொண்ட இலக்கை அடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு.