• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-25 15:52:30    
ஜெர்மன் குழந்தைகளும் கால்பந்தும்

cri

ஜெர்மனியில் மிகப் பல குழந்தைகள் கால் பந்து விளையாடுகின்றனர். மிகச் சிறிய வயதுடைய கால்பந்து அணிகளில் குழந்தைகளின் சராசரி வயது 5 மட்டுமே. ஆனால், ஜெர்மனியின் கால்பந்து நட்சத்திரங்கள் தீவிரமான பயிற்சி மூலம் வளர்க்கப்படுவார்கள் அல்ல. ஜெர்மன் நாட்டவர், கால்பந்து விளையாட்டில் இயல்பாகவே மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர்.

ஹான்போக்கின் புற நகரிலுள்ள ஒரு சிறுவர் கால்பந்து மன்றத்தில் மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளால் உருவாக்கப்பட்ட இரண்டு கால்பந்து அணிகள் உள்ளன. இந்த குழுக்கள் குழைந்தைகள், கால்பந்து விளையாட்டை அறிந்துகொள்வதையும் சோதனை முறையில் விளையாடுவதையும் முக்கியமாகக் கொண்ட விளையாட்டுக் குழுக்களாகும். 5 முதல் 7 வயதுடைய குழந்தைகள் இடம்பெறும் கால்பந்து அணிகள், அதிகாரப்பூர்வ கால்பந்து அணியின் அளவைக் கொண்டவை. இந்த குழைந்தைகள் வாரந்தோறும் இரண்டு நாட்கள் மாலை வேளையில் பயிற்சி செய்கின்றனர். அணியில் பகிர்ந்து கொள்வது, ஒத்துழைப்பது, உடற் பயிற்சி செய்வது, காயமடையாமல் தன்னை பாதுகாப்பது ஆகியவற்றை இக்குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர்.

அவர்கள் முயற்சியுடன் ஓடுகிறார்கள், மகழ்ச்சியுடன் கூவி ஆரவாரம் செய்கிறார்கள். சில அணிகளில், விளையாடும் போது யார் கோல் போடுகிறாரோ அவர் தலைவரின் சின்னத்தை அணிந்து தலைவராக இருக்கலாம் என்று விதிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து அணிகளின் பயிற்சியாளர்களில் பெரும்பாலோர் ஓய்வு நேர ஆசிரியர்கள். ஆனால், அவர்கள் தேர்வு மூலம் பெற்ற தகுதி பத்திரத்துடன் பணியில் ஈடுபடுகின்றனர், எனவே அவர்கள் மிகவும் மதிக்கப்படுகின்றனர். குழந்தைகளின் பயிற்சியும் முறைப்படி நடைபெறுகின்றது. வயதுவந்தவர்களின் பயிற்சிகளோடு ஒப்பிடும்போது சிறிதளவும் இப்பயிற்சிகள் எளிதாக இல்லை, பந்தை அகற்றுவது, பந்தை தலையால் மோதுவது, corner பந்தை உதிப்பது, இருவர் ஒத்துழைத்து விளையாடுவது, எதிர் தரப்பினர் தவறிழைக்க செய்வது முதலிய விளையாட்டுத் தந்திரங்களை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

ஒவ்வொரு பயிற்சியின் போதும், பெற்றோர்கள் தமது குழந்தையை நேரடியாக அனுப்ப வேண்டும், பயிற்சி முடிந்த பின், குழந்தைகள் குளிக்க வேண்டும். இதற்கிடையில் பயிற்சியளிக்கும் ஆசிரியர்கள் அவர்களை மிகுந்த கவனத்துடன் பராமரிக்கிறார்கள். குளித்து முடித்து, அனைத்து குழந்தைகளின் தலைமயிர் காய்ந்த பிறகு அவர்கள் வீட்டுக்கு திரும்பலாம்.

குழந்தைகள் அணியும் ஆடைகள் பொதுவாக மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டவை. அதிகாரப்பூர்வ போட்டிக்கு போகும் போது, பயிற்சியாளர்கள் பெரிய பயணப் பையில் இந்த ஆடைகளை வைத்து போட்டித் தளத்துக்கு கொண்டு செல்வார். பின்னர், குழந்தைகள் தமக்கு பிடித்த எண்கள் அச்சடிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து போட்டியில் ஈடுபடுவர். போட்டிக்குப் பின், ஆசிரியர் இந்த ஆடைகளை மீண்டும் ஒன்று சேர்ப்பார். இந்த அசுத்த ஆடைகளை குழந்தைகளின் பெற்றோர்கள் மாறிமாறி சுத்தம் செய்வர். போட்டியின் முடிவு எப்படி இருந்த போதிலும் போட்டிக்கு பின், பயிற்சியாளர் குழந்தைகளை ஐஸ்கிரீம் சாப்பிட அழைப்பார்.