• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-26 15:38:04    
ஆப்பிரிக்க கால்பந்து ஆண்டு

cri

ஜனவரி 29ம் நாள் துவங்கவுள்ள ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகளின் இரண்டு நாள் உச்சி மாநாட்டின் துவக்கமாக 2007ம் ஆண்டை ஆப்பிரிக்க கால்பந்தாட்டத்துக்கான சர்வதேச ஆண்டாக அறிவிக்கும் விழா நடைபெறும் என்று ஆப்பிரிக்க ஒன்றியத்தின் ஆணையர் அறிவித்துள்ளார். 2007ம் ஆண்டு ஆப்பிரிக்கா முழுவதிலுமாக ஆப்பிரிக்க கால்பந்தாட்டத்துக்கான சர்வதேச ஆண்டு அனுசரிப்பும், 2010ம் ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தென் ஆப்பிரிக்கா நடத்துவது தொடர்பான, தொடர் நிகழ்ச்சிகளும் இடம்பெறும் என்று ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சமூக விவகாரங்களுக்கான ஆணையர் பியென்ஸ் கவானாஸ் கூறியுள்ளார்.

 எதிர்வரும் பிப்ரவரித் திங்கள் ஆப்பிரிக்க கால்பந்தாட்ட கூட்டமைப்பின் 50வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்த ஆப்பிரிக்க கால்பந்தாட்டத்துக்கான சர்வதேச ஆண்டு அனுசரிப்புத் துவக்கம் அமைகிறது. மேலும் விளையாட்டை ஒற்றுமை, அமைதி, ஒப்புரவு, ஒன்றிப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும், எச் ஐ வி, எய்ட்ஸ் போன்ற கொடுமைகளுக்கு எதிரான பரப்புரை அம்சமாகவும் பயன்படுத்து நோக்கில் இந்த ஆப்பிரிக்க கால்பந்தாட்டத்துக்கான சர்வதேச ஆண்டு அனுசரிப்பு அமைகிறது.