என்னத்தை படிச்சு, என்னத்தை வேலை செஞ்சு, என்னத்தை சம்பாதிச்சு, என்னத்தை சாதிக்க போறோம்...வாழ்க்கை வெறுத்து போச்சுங்க...இப்படியாக சிலர் புலம்பக் கேட்டிருப்போம்...

என்னது சுற்றுலாவுக்கு போகனுமா...ஐயோ...நான் கேக்கலை சாமி..நீயே உங்க அப்பாகிட்ட சொல்லிக்கோ..அந்த மனுசன் வள்ளுன்னு எரிஞ்சு விழுவாரு.இப்படியும் சில தாய்மார்கள் கூறக் கேட்டிருப்போம். நன்றியுணர்ச்சிக்காக மனிதரோடு ஒப்பிடப்படுவது தவிர, இப்படி எரிந்து விழும்போதும் மனிதர்களோடு நாய்கள் உருவகப்படுத்தபடுவதுண்டு.
இப்படி பொதுவாக சலிப்பும், வெறுப்பும், எரிச்சலும் அவநம்பிக்கையும் கொண்டிருப்பவர்களுக்கு இதயத்தில் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. என்னங்க, பொதுவாக மனிதர்கள் எல்லோருக்குமே எப்போதாவது இந்த சலிப்பு, வெறுப்பு, எரிச்சல் இதெல்லாம் ஏற்படத்தானே செய்கிறது. வாழ்க்கையில் அவநம்பிக்கை எப்போருக்கும்தான் உள்ளது. அப்படியென்றால் அனைவருக்குமே இதய நோய் வருமா? இந்தக் கேள்வி எழுவது இயற்கையே. ஆய்வுகள் கூறும் உண்மை, ஆமாம் என்பதே. இப்படி சலிப்பும், வெறுப்பும், எரிச்சலுமாக திரிந்தால் இதயத்துக்கு நல்லதில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது இல்லையா...
பொதுவாகவே வாழ்க்கையில் ஒரு வித பிடிப்பில்லாத, அவநமிப்பையுடைய, எதிர்மறையான, வெறுப்புணர்வு கொண்டவர்களின் உடலில் உள்ள இரத்ததில் வீக்கம், எரிச்சல் ஏற்படுத்தும் சில ரசாயணங்கள் இருப்பதாக அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர்.

இவை உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, வாதம் இவற்றுக்கு வழிகோலக்கூடும் எனப்படுகிறது. மட்டுமல்ல அன்பர்களே, நமது குணாம்சங்களின் அங்கமாக பார்க்கப்படும் நமது பழக்க வழக்கங்கள், உணர்வு வெளிப்பாடுகள் நமது உடல் நலத்தில் நேரடி தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை என்பதற்கு மேலதிக சான்றுகளை புதிய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. மன அழுத்தம் நமக்கு மாரடைப்பை ஏற்படுத்தும் அல்லது உடல் பருமன் அல்லது புகை பழக்கம், அதிக கொலஸ்ட்ரால் கொழுப்புச் சத்து அதிகரிப்புக்கு ஆகியவற்றுக்கு வழிகோலும் என முந்தைய ஆய்வுகள் கூறியுள்ளன. மேலும் இந்த மன அழுத்த இயக்குநீர் சுரப்பதால் வீக்கத்துடன் கூடிய எரிச்சல் ஏற்பட்டு பின் இதய நோயாக மாறும் நிலை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அக மருத்துவ பதிவேடு என்ற ஏட்டில் தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வின் முடிவு இத்தகைய வெறுப்பு, சலிப்பு, எரிச்சல் கலந்த அவநம்பிக்கையும் இதய நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிப்பதாக கண்டறிந்துள்ளது. மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நளினி ரஞ்சித் என்ற அறிவியலரும் அவரது குழுவினரும் 45 வயது முதல் 84 வயது வரையிலான ஏறக்குறைய 7000 பேரைக் கொண்டு நடத்திய ஆய்வின் முடிவுகளே இந்த அக மருத்துவ பதிவேடு என்ற ஏட்டில் தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ளன.

ஆண்களும் பெண்களுமாக 7000 பேரைக்கொண்டு, அவர்களது சமூகப் பின்னணி, மன அழுத்தம், ஊக்கமின்மை ஆகியவற்றை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான கேள்வித்தாள்களை இந்த 7000 பேரும் பூர்த்தி செய்தனர். பின்னர் 2 ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு இந்த கேள்வித்தாள்கள் கொடுக்கப்பட்டு அவர்களது எரிச்சல், அவநம்பிக்கை, வெறுப்பு, சலிப்பு இவை அளவீடு செய்யப்பட்டன. மேலும் வீக்கத்துடன் கூடிய எரிச்சலை ஏற்படுத்தும் ரசாயணங்களான ஃபைப்ரினோஜன், சி- எதிர்விளைவுப் புரதம், ஐ எல்- 6 ஆகியவை உள்ளனவா என்று அவர்களது ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த வீக்கத்துடன் கூடைய எரிச்சல் ரத்த ஓட்டத்தை தடைசெய்யும் வகையில் ரத்தக் குழாய்களில் அல்லது நரம்புகளில் கொழுப்புச் போன்ற பொருட்கள் சேர்ந்து அவை தடித்து கடினமாகிப்போகும் நிலையான அத்தேரோக்லோரோசிஸ் என்பதை உருவாக்கும் எனப்படுகிறது. இப்படி ரத்த ஓட்டம் தடை பட்டு நெஞ்சு வலி ஏற்பட்டு அல்லது இந்த தடித்த குழாய்கள் வெடித்து அல்லது அறுந்து போனால் அதன் விளைவாக மாரடைப்பு, வாதம் ஆகியவை ஏற்படும். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் மன அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த 3 ரசாயணங்களில் இரண்டு இருந்ததை ஆய்வாளர்கள் கண்டனர். பொதுவில் எரிச்சல், வெறுப்பு, சலிப்பு கலந்த அவநம்பிக்கை கொண்டவர்களின் ரத்ததில் இந்த மூன்று ரசாயணப் பொருட்களும் இருந்தததாக நளினி ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார். இந்த 3 ரசாயணப் பொருட்களையும் பற்றி மேலதிக ஆய்வு செய்தபோது இவற்றுக்கும் அதிக எடை, நீரிழிவு நோய் ஆகியவற்றோடு தொடர்புள்ளமை அறியப்பட்டது. இத்தகைய மன அழுத்தம், எரிச்சல், அவநம்பிக்கை, வெறுப்பு ஆகிய உளவியல் சமூக காரணிகள் புகைபழக்கம் உள்ளிட்ட பழக்கங்களை ஏற்படுத்தி அல்லது உடல் பருமன் உள்ளிட்ட உடலியல் மாற்றங்களைத் தூண்டி அதன் விளைவாக இதய நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகின்ற
|