• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-29 09:29:24    
குரோவேசியன் ஓபன் மேசைப்பந்து போட்டி

cri

குரோவெசியாவின் சாக்ரேப் நகரில் நடைபெற்ற சர்வதேச மேசைப்பந்து கூட்டமைப்பின் சாம்பியன் பட்ட போட்டிகளில் சீன அணி அனைத்து தங்கங்களையும் வென்றுள்ளது. 23 வயது ஹாவ் ஷுவாய் ஆடவர் ஒற்றையர் போட்டியில் கடந்த ஆண்டின் சாம்பியனான பெலாரஸ் நாட்டின் விளாடிமிர் சம்சோனோவை வென்று, தனது முதல் சர்வதேச சாம்பியன் பட்ட வெற்றியை பெற்றார்.

18 வயது குவோ யுவே பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் சக நாட்டவரான வாங் நான்னை வென்று தங்கம் பெற்றார். ஏற்கனவே 2003ல் ஜப்பான் ஓபன், 2005ல் சைனா ஓபன் ஆகியவற்றை வென்ற குவோ யுவே, ஸ்லோவேனியா மற்றும் குரோவேசிய சாம்பியன் பட்ட போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் சீனாவின் மா லின், வாங் ஹாவ் இணை தென் கொரியாவின் சோ இயோன் ரே, லீ ஜுங் வூ இணையை வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றனர். ஒற்றையர் பிரிவில் வெற்றி வாய்ப்பை கோட்டைவிட்ட இந்த இருவரும் இரட்டையர் பிரிவில் தீவிர கவனம் செலுத்தியதன் மூலம் சீன அணிக்கு மேலும் ஒரு தங்கத்தை பெற்றுத்தந்தனர். 2001 ஜ்ப்பானிலும், 2003ல் டென்மார்க்கிலும், ஸ்வீடனிலும், 2006 மீண்டும் ஜப்பானிலும் என ஏற்கனவே 4 முறை சர்வதேச அளவிலான சாம்பியன் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்ற இணை மா லின், வாங் ஹாவ் இணையாகும்.

பெண்கள் இரட்டையர் ஆட்டத்தில் சீனாவின் சென் சிங், லீ சியாவ்சியா இணை ரஷ்யாவின் ஒக்சானா ஃபடீவா, பெலாரசின் வெரோனிகா பாவ்லோவிச் இணையை வென்று சாம்பியன் பட்டம் பெற்றனர். இதில் லீ சியாவ்சியா ஏற்கனவே மூன்று சர்வதேச சாம்பியன் பட்டம் பெற்றவர், சென் சிங்கிற்கு இந்த குரோவேசியன் சாம்பியன் பட்ட வெற்றியே முதல் சாம்பியன் பட்ட வெற்றியாகும்.