தியானென்மன்னில் மேசைபந்து திருவிழா
cri
இவ்வாண்டு கோடைக்காலத்தில் உலகின் மிகப்பெரிய சதுக்கமான, தியானென்மன் சதுக்கத்தில் ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் ஒன்றுக்கூடி மேசைபந்து விளையாடுவார்கள் என்று அறியப்படுகிறது. சீனத் தலைநகர் பெய்சிங்கில் 6வது விளையாட்டு விழா இவ்வாண்டு கோடையில் நடைபெறும்போது, மிகப்பெரிய அளவிலான மேசைப்பந்து போட்டியொன்றை நடத்த பெய்சிங் மாநகராட்சியின் விளையாட்டுத்துறை திட்டமிட்டுள்ளது. இவ்வாண்டு மொத்தம் 327 விளையாட்டு நிகழ்ச்சிகள் பெய்சிங் மாநகராட்சியின் விளையாட்டுத்துறையினரால் நடத்தப்படும். சீனக்குடிமக்கள் எவரும் கலந்துகொள்ளக்கூடிய இந்த விளையாட்டு நிகழ்ச்சிகளில் மிகப்பெரியதாக வரும் ஜூன் ஜூலைத் திங்களில் நடத்தப்படவுள்ள மேசைப்பந்து போட்டி அமையும் என்று பெய்சிங் மாநகராட்சியின் விளையாட்டுத்துறையின் தலைவர் சுன் காங்லின் கூறியுள்ளார். 1959ம் ஆண்டில் உலக மேசைப்பந்து சாம்பியன் பட்ட போட்டியில் ருங் குவோதுவன் தங்கம் வென்றதற்கு பிறகு இதுவரை 130க்கும் அதிகமான உலக சாம்பியன் பட்ட போட்டிகளின் வெற்றி பதக்கஙகளை சீன மேசஎஇபந்து விளையாட்டு வீரார்களும், வீராங்கனைகளும் பெற்றுள்ளனர். மேசப்பந்து விளையாட்டில் உலகளவில் வெற்றிக்கொடி நாட்டி வரும் சீனாவில் தியானென்மன் சதுக்கத்தில் ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் ஒன்றுக்கூடி பங்கேற்கும் இத்தகைய பிரம்மாண்ட அளவிலான போட்டி நடைபெறுவது ஒன்றும் பெரியதல்ல.
|
|