• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-30 08:25:25    
"தாவோயிசம்" தோற்றம்

cri
கன்பூசியஸ் பிறப்பதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ச்சு(Chu) மாகாணத்தில் ஓர் அறிஞர் பிறந்தார். அவர் பெயர் லாவோ தான். அவரை எல்லோரும் லாவோ ஸி என்றழைத்தனர். சோ (Zhou) வமிச காலத்தில் அரண்மணையில் ஒரு கீழ்நிலை அதிகாரியாக அவர் பணியாற்றினார். நூலகத்தைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு அவரிடம் விடப்பட்டது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிறையத் தத்துவ நூல்களைப் படித்தார். முடிவில், "வானம், பூமி, மனிதகுலம், கோட்பாடுகள்" ஆகியவை அடங்கியதே இந்த உலகம் எனத்தீர்மானித்தார். கோட்பாடுகளுக்கு "தாவோ" (Dao) எனப் பெயரிட்டார். அவருடைய கருத்துப்படி "கோட்பாடுகள்" தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. இந்த உலகில் எல்லாமே கோட்பாடுகளில் இருந்து தான் கினைக்கின்றன. எல்லாமே இயற்கை நியதிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. ஒரு மனிதன் வாழலாம் அல்லது இறக்கலாம். ஒரு பொருள் பெரிதாகவோ, சிறிதாகவோ இருக்கலாம். ஒரு மனிதன் அழகாகவோ, அசிங்கமாகவோ இருக்கலாம். இவை யாவும் முரண்பாடுகள். ஆயினும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. அதாவது, உயர் இல்லாமல் இறப்பு இல்லை. பெரியது இல்லாமல் சிறியது இல்லை. அழகு இன்றி அசிங்கம் இல்லை. மேலும், நல்லது கெட்டதாகலாம். கெட்டதும் நல்லது ஆகலாம். இப்படிப்பட்ட நிலையில், வலுவில் மாற்றங்களைக் கொண்டு வரக் கூடாது என்று லாவோ ஸி கூறினார். எதையும் அதது இருக்கும் நிலையில் அப்படியே விட்டு விட வேண்டும். மாறுதல் தானாக நிகழும் என்பது லாவோஸி கூறிய கோட்பாடு. இதுவே 'தாவோயிசம்' என அழைக்கப்பட்டது. பிரெஞ்சுப் பேரறிஞர் ழீன்பால் சார்த்ரே முன்வைத்த 'இருத்தலியல்' (எக்ஸிஸ்டென்ஷியலிசம்) என்ற கோட்பாட்டுக்கும், லாவோஸி எடுத்துரைத்த தாவோயிசக் கோட்பாட்டுக்கும் அவ்வளவாக வித்தியாசம் இல்லை.
லாவோ ஸி தனது ஆயுளின் கடைசிக் கட்டத்தில் சமுதாயத்தின் போக்கைக் கண்டு மனம் நொந்தார். மக்களிடையே போர் இல்லாத, ஏழை-பணக்காரன் இடைவெளி இல்லாத ஒரு பழங்கால சமுதாயம் வேண்டும் என விரும்பினார். ஆகவே அரண்மனை வேலையை உதறித்தள்ளி விட்டு, ஊர் ஊராகச் சுற்றினார். ஒரு முறை ஹன்கு குவான் கணவாய் வழியாக, ஒருமாட்டின் மீதேறி அவர் போய்க் கொண்டிருந்த போது, "பேசியதையும், நினைப்பதையும் எழுதினால் என்ன?" என்று உள்ளூர் அதிகாரிகள் கேட்டனர். உடனே 5000 வார்த்தைகளில் தனது சிந்தனைகளை எழுதினார். அதுவே தாவோயிசம் என்ற கோட்பாடாயிற்று.
அவருடைய காலத்திற்குப் பின் போரிடும் தேசங்கள் காலத்தில் (கி. மு. 475-221) சுவாங் சூ என்ற அறிஞர் தாவோயிசக் கருத்துக்களை பிரச்சாரம் செய்தார். லாவோ ஸி போல அவரை சுவாங் ஸி என்று மக்கள் அழைத்தனர். அவருக்குப் பெருந்தொகை ஊதியத்துடன் தலைமை அமைச்சர் பதவி தரப்பட்ட போதும், வெறுத்து ஒதுக்கினார். அதிகாரமும் அரசியலும் வேண்டாம். ஆன்மீக வாழ்வே போதும் என்று கூறி, தாவோயிசக் கருத்துக்களை விளக்கும் பல குட்டிக்கதைகளை எழுதினார். அவற்றிலே ஒன்று-ஹுன் துன்னுக்கு ஏழு துளைகள் என்ற கதை.
பண்டைக் காலத்தில், வடக்கே ஹு என்ற மன்னனும், தெற்கே ஹு என்ற மன்னனும் இருந்தனர். அவர்கள் இருவரின் நாடுகளுக்கு நடுவே ஹுன் துன் என்ற மன்னனின் நாடு இருந்தது. ஆனால் ஹுன் துன் முகத்தில் இருக்க வேண்டிய ஏழு ஓட்டைகள் (இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத் துளைகள், ஒரு வாய்) இல்லை. நெருங்கிய நண்பர்களான ஹு வும், ஷு வும் இந்த முழுமையற்ற முகமுடைய மன்னனின் நாட்டின் வழியே கடந்து ஒருவரை ஒருவர் சந்துக்க வேண்டியிருந்தது. ஹுன் துன் அவர்களை மிகவும் உபசரித்தான். ஆகவே, அவனுக்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் எனத் தீர்மானித்த இரு நண்பர்களும் அவனுடைய முகத்தில் ஏழு ஓட்டைகளை உருவாக்கி, முழுமையாக்குவது என முடிவு செய்தனர். தினமும் ஒரு ஓட்டை போட்டனர். ஆனால் ஏழாவது நாளில், முழுமையான முகத்தை அனுபவிக்க ஹுன் தன் மன்னன் உயிரோடு இல்லை.
"இயற்கையின் நியதியை மாற்றக் கூடாது" என்ற தாவோ கருத்தை இந்தக் கதை மூலம் சுவான் ஸி விளக்கினார். "எதையும் செய்யாமலே இருந்து செய்வது" என்பது இதன் கருப்பொருள்.