• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-30 10:00:32    
இந்த உதவியிலிருந்து நலன் பெறும் குழந்தைகள்

cri

இந்த வட்டத்தில் சியூ யு யு எனும் குழந்தை 7 வயதான போது துவக்கப் பள்ளியில் நடைபெற்ற உடல் பயிசோதணை ஒன்றில் அதன் இருதயம் வலது பக்க நோக்கி நகர்வது மற்றும் பல நோய்களால் பீடிக்கப்பட்டான் என்பது தெரியவந்தது. வறுமை காரணத்தால் அவர் மருத்துவ சிகிச்சை பெற முடியவில்லை.
இதைக் கேட்டறிந்த சியூ யூ சாங் ஊ ச்சி சாங் உள்ளிட்ட பலர் சத்துணவு பொட்டலம் ஒன்றுடன் அந்தக் குழந்தையைப் பார்க்கச் சென்றார்கள். மரண விளிம்பில் தத்தளிக்கும் அக்குழந்தையைப் பார்த்துவிட்டு அக்குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் மனவுறுதி பூண்டனர். அன்றிரவே இச்செஞ்சிலுவை சங்கம் அவசர கவுன்சில் கூட்டம் நடத்தியது. 30 கவுன்சில் உறுப்பினர்கள் அனைவரும் நண்கொடை வழங்கினர். பின்னர் சங்க உறுப்பினர்களிடையில் நண்கொடை திரட்டினர். இறுதியில் மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் யுவான் நண் கொடை தொகையை அவர்கள் திரட்டினர்.


சியூ யு யு புஃச்சோ ராணுவ ஆணை வட்டாரத்தின் பொது மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டான். 4 திங்கள் மருத்துவ சிகிச்சைக்கு பின் குணமடைந்த அவன் தமது பள்ளிக்குத் திரும்பினான்.
சிங் சாங் வட்டத்தில் சியூ யுன் யிங் எனும் 6 வயது சிறுமியின் உடலில் 10க்கும் அதிகமான முட்டை அளவு கழலைகள் வளர்ந்தன. வலியை தாங்க முடியாமல் அவன் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. சியூ யூ சாங் முதலியோர் நன்கொடை திரட்டி அவளுக்கு நிதி உதவி அளித்தார். சியு சூ சாங் கூறியதாவது. 
சிறுமி யுன் யிங்கிற்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு பணமில்லை. கிராமத்தலைவர் என்னைத் தேடி வந்தார். நான் முதலில் செஞ்சிலுவை சங்கத்தின் கவுன்சில் கூட்டம் நடத்தினேன். அவ்வடத்திலேயே நாங்கள் நண்கொடை வழங்கினோம். நாங்கள் 3, 4 ஆயிரம் யூவானைத் திரட்டினோம். ஆனால் அது போதாது என்று எண்ணி நாங்கள் வீதி வீதியாக சென்று உண்டியல் குலுக்கி நன்கொடை திரட்டினோம். இறுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் யூவான் சேர்ந்தது என்றார் அவர்.


இந்தச் சிறுமி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை பெற்றாள். இப்போது அவள் ஓய்வெடுக்கவோ பள்ளிக்கு செல்லவோ முடியும் என்று அவளுடைய தாயார் கூறினார்.
2001ம் ஆண்டு முதல் இந்தச் செஞ்சிலுவை சங்கம் சுமார் 4 லட்சம் யூவான் தொகையைத் திரட்டியுள்ளது. மொத்தம் 3000க்கும் அதிகமானோர் இதனால் பயன் பெற்றுள்ளார்கள்.
சிங் சாங் வட்ட செஞ்சிலுவைச் சங்கம் துவக்கத்தில் இருந்த 37 உறுப்பினரிலிருந்து இப்போது 212 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக வளர்ந்துள்ளது. இவர்களில் விவசாயிகள் தனியார் தொழிலதிபர் வெளியூரிலிருந்து வரும் தொழிலாளர்கள் அடங்குவர். இவர்களில் செல்லமுடையவராயினும் செல்வம் அற்றவராயினும் அனைவரும் அன்பு உள்ளம் கொண்டவர்கள். திரு சாய் சன் லி கூறியதாவது.
தனிப்பட்ட நபரின் திறமை எல்லைக்குட்பட்டது. அனைவரின் ஆற்றலையும் ஒன்று திரட்டினால் சமூகத்துக்காக சில காரியங்களைச் செய்ய முடியும். செஞ்சிலுவை சங்கத்தை சார்ந்திருந்தால் தான் திறமையை வெளிப்படுத்த முடியும் என்றார்.


இன்று இந்த அரசு சாரா செஞ்சிலுவை சங்கத்துக்கு சுய கவுன்சில் உண்டு. அன்றி அதற்கு கண்டிப்பான நிதி மற்றும் கூட்ட முறை விதிகள் உண்டு. குறிப்பிட்ட காலத்தில் உறுப்பினர் கூட்டம் கூடும். எல்லாம் அதன் சாசனத்தின் படி செயல்படும். அதன் உறுப்பினர்கள் அயராதுழைத்து தொண்டு புரிகிறார்கள்.