க்ளீட்டஸ். இன்றைய நிகழ்ச்சியில் காய்கறி கூட்டு தயாரிப்பது பற்றிக் கூறுகின்றோம். வாணி. சீன உணவு முறையில், சைவ உணவு. அப்படித்தானே? க்ளீட்டஸ். ஆமாம். முற்றிலும் காய்கறிகள் இடம் பெறும் உணவு இது! வாணி. பீடிகை பலமாயிருக்கின்றது. அதனால், ஆவல் அதிகமாகின்றது. க்ளீட்டஸ். தேவையானவை இதோ: பச்சை நிறக் காலி பிளவர் இளம் மக்காச்சோளம் காளான், கேரட் சிறிதளவு உப்பு, ஸ்டார்ச் கலவை சமையல் எண்ணெய் வாணி. சாதாரணமான காலி பிளவர் என்றாலும் பரவாயில்லையா?
க்ளீட்டஸ். பரவாயில்லை. அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது இது. இனி, செய்முறை காலி பிளவரை நன்றாகச் சுத்தம் செய்து, துண்டு துண்டாகப் பிரித்துக் கொள்ளவும். இளம் மக்காச் சோளத்தைக் குறுக்குவாட்டில் வெட்டவும். கேரட்டையும் நன்கு துண்டு போடவும். பிறகு, மிதமான வெந்நீரில் அனைத்தையும் சுத்தப்படுத்தவும். இப்போது, வாணலியில் 3 தேக்கரண்டி சமையல் எண்ணெயை ஊற்றி, இந்தக் காய்கறிகளை அதில் கொட்டி வதக்கவும். தேவையான அளவு உப்பைச் சேர்க்கவும். ஓரளவு வெந்த பிறகு, ஸ்டார்ச் கலவையை அவற்றின் மீது தெளிக்கவும். தட்டுக்கு மாற்றிக் கொண்டால், காய்கறி கூட்டு தயார். வாணி. கேட்கும் போது, ருசியாக இருக்கும் போல் தெரிகின்றது. க்ளீட்டஸ். உண்மைதான். தட்டின் நுனிப்பகுதியைச் சுற்றிலும் மக்காச் சோளம், அதற்கிடையில் கேரட், நடுவில் வட்டமாக காலிபிளவர் துண்டுகள், எல்லாவற்றுக்கும் மையத்தில் காளான் என அடுக்கி அலங்காரம் செய்தால், பார்ப்பதற்குப் பிரமாதமாக இருக்கமே! வாணி. பிறகு, விருப்பம் போல் உண்ணலாம், அப்படித்தானே!
க்ளீட்டஸ். ஆமாம்! வாணி. என்ன நேயர்களே. எளிமையான சீன வகை காய்கறி கூட்டு, இப்போது உங்கள் வீட்டில் தாயர்! தயாரித்து, ருசித்த பிறகு, ஒரு வரி எழுத மறக்க வேண்டாம்.
|