• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-31 08:52:36    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: அடுத்து பரளச்சி காசிராஜன் எழுதிய கடிதம். சீன வானொலியின் தற்போதைய வளர்ச்சியை பார்க்கும்போது, நேயர்களின் செயல்பாடு ஒரு பங்கு என்றால் நிலையத்தினரின் பங்கு முமடங்காக அதிகரித்துள்ளது. சிற்றலை வானொலிகளில் அதிக நேயர்கள் கொண்ட வானொலியாக சீன வானொலி செயல்படுகின்றது. கடித அறிவிப்பின் மூலம் பல புதிய நேயர்களின் பெயர்களை அறிய முட்கிறது. நிகழ்ச்சிகளின் தரம் மேன்மையான நிலையில் உள்ளது. சிறப்பாக செயல்படும் நிலையத்தினரை பாரட்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் எழுதிய கடிதம். அக்டோபர் 27ம் நாள் ஒலிபரப்பான உங்கள் குரல் நிகழ்ச்சியில், திருச்சி அண்ணா நகர் நேயர் மன்றம் தயார் செய்து வழங்கிய உரையாடலின் நாஙாவது பகுதியைக் கேட்டு மகிழ்ந்தேன். பல்வேறு அம்சங்கள் பற்றி இரண்டு ரவிச்சந்திரன்களும் சிகழ்த்திய உரையாடல் விறுவுறுப்பாக இருந்தது. நட்புப்பாலம் நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு வந்த பரோட்டா சமையற்கலைஞர்களின் நேர்காணல் கேட்டேன். தமிழர்களே சிலர் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு இவர்களை தவிக்கவிட்டனர் என்பதை அறிந்தபோது சற்றே வருத்தமாகத்தான் இருந்தது. ஆனாலும் இந்நிகழ்ச்சியில் விடுக்கப்பட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்து வருங்காலத்தில் மற்ற சமையற்கலைஞர்கள் மகவும் விழிப்புடன் இருப்பார்கள் என்று நம்புகிறேன் என்று எழுதியுள்ளார்.

கலை: அடுத்து கனடாவைச் சேர்ந்த எஸ். சுப்பிரமணியன் எழுதிய் அகடிதம். கனடாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழரான இவர் கடந்த 40 வருடங்களாக சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பை கேட்டு வருவதாக எழுதியுள்ளார். மேலும் சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் பயனுள்ள, தெளிவான, அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார, சுற்றுச்சூழல் விடயங்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன என்றும் இணையதளத்தினூடால செய்திகளை வாசிக்க வாய்ப்புள்ளது என்பது மகிழ்ச்சி என்றும் 1960களிலும், 70 களிலும் மாதகல கந்தசாமி, வீ, சின்னத்தம்பி ஆகியோர் ஆற்றிய பணியை மகிழ்ச்சியோடு நினைவு கூர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து சேலம் எஸ். ஆர். டி. பாலசுப்ரமணியம் எழுதிய கடிதம். நவம்பர் 27ம் நாள் ஒலிபரப்பான சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் கோழிக்கறி காளான் கஞ்சி பற்றி கூறக் கேட்டோம். அந்த சமையல் குறிப்பை செய்து பார்க்க முயன்றோம். இறுதியில் செய்த அனைத்தையும் நான் ஒருவனே குடிக்க வேண்டியிருந்தது. ஆனால் கொஞ்சம் மசால போட்டு தலைக்கறி செய்வது போல தொக்காக செய்தபோது வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் சாப்பிட்டனர். 1993 முதல் 94 வரை மலேசியாவில் அக்கா வீட்டில் இருந்தபோது நீளமான முட்டைகோஸ் இலைகள், மீன் உருண்டை பந்து, கோழிக்கறி, பெரிய கொத்தமல்லி தணு போட்டு செய்த சூப்பின் சுவை இன்றும் நினைவில் உள்ளது என்று எழுதியுள்ளார்.