• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-31 14:58:10    
விவாக ரத்து 3

cri

புதிதாகக் கிடைத்த அமைதியோடு படகு போய்க் கொண்டிருந்தது. துடுப்பினால் தண்ணீரில் ஏற்படும் சளப்சளப் ஒலிமட்டும் அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தது. அய்-குவின் கூர்மையான காலணிகளைப் பார்த்தபடியே பா-சன் கண்ணயர்ந்தான். அவன் வாய் மெல்லமெல்ல விரிந்தது. முன்புற கேபினில் இருந்த இரண்டு மூதாட்டிகள் மணிமாலையை உருட்டியபடியே புத்தமறைகளை ஓதத் தொடங்கினார்கள். அவர்கள் அய்-குவை பார்த்தபடியே, உதடுகளை மடித்து தலையைக் குலுக்கியபடியே தங்களுக்குள் அர்த்தமுள்ள பார்வையைப் பரிமாறிக் கொண்டனர்.

அய் கு படகில் கட்டப்பட்டிருந்த பந்தலையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். கிழட்டு மிருகமும், சின்ன பிசாசும் திரும்ப மீள முடியாதபடி சீரழிய பிரச்சினையை எப்படிக் கிளப்புவது என்று சிந்திக்கிறாளோ என்னமோ! வெய்யை கண்டு அவள் பயப்படவில்லை. அவரை இரண்டு தடவை பார்த்திருக்கிறாள். அவர் ஒரு கொழுத்த வட்டத் தலையன்—அவரைப் போலவே நிறையப் பேர் அவளுடைய கிராமத்தில் இருக்கின்றனர். என்ன, அவர்கள் கொஞ்சம் கறுப்பு—அவ்வளவுதான்.

சுவாங் மு-சன் பைப்பில் புகையிலை தீர்ந்துவிட்டது. அதில் இருந்த வெற்று எண்ணெய் கொப்புளித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் விடாமல் உறிஞ்சிக் கொண்டிருந்தார். அவருக்குத் தெரியும்—வாங் துறைக்கு அடுத்தபடியாக பாங் கிராமத்தில் தான் படகு நிற்கும். அதோ, கிராமத்தின் நுழைவில் உள்ள இலக்கிய நட்சத்திர அரங்கைக் காண முடிகிறதே! அடிக்கடி இந்தக் கிராமத்திற்கு வந்திருக்கிறார். இனிமேல் வெய்யிடம் பேசிப் பயனில்லை. தன்னுடைய மகள் எப்படிக் கண்ணீரும் கம்பலையுமாக கதறிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பி வந்தாள் என்பது அவருடைய நினைவுக்கு வந்தது. அவளுடைய மாமனாரும், கணவனும் அவளை என்ன பாடுபடுத்தி விட்டார்கள். கடந்த காலம் அவர் கண்முன் மெல்லமெல்ல விரிந்தது. பொதுவாக கெட்டவர்களைத் தண்டிக்கும் போது ஒரு அலட்சியமான புன்னகை மட்டும் அவரிடம் இருந்துவரும்—ஆனால் இந்த முறை கிடையாது. கொழுத்த ஏழாவது முதலாளியின் உருவம் அவருடைய நினைவில் குறுக்கிட்டது. சிந்தனைகளை ஒழுங்குபடுத்த முயன்றார்.

படகு அமைதியாக நகர்ந்து கொண்டிருந்தது. புத்த மறைகளின் ஓசை மட்டும் ஓங்கி ஒலித்தது. எல்லோருமே, அய் குவைப் போலவும், அவளுடைய அப்பனைப் போலவும் எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

"மு மாமா, பாங் கிராமம் வந்தாச்சு."

படகுக்காரனின் சத்தத்தால் சிந்தனை கலைந்து அனைவரும் இலக்கிய நட்சத்திர அரங்கு எதிரே இருப்பதைக் கண்டனர்.

சுவாங் கரையில் குதித்தார். அவரைத் தொடர்ந்து அய் குவும் இறங்கினாள். அரங்கைக் கடந்து, வெய் வீட்டை நோக்கி நடந்தனர். தெற்கே முப்பது வீடுகளைத் தாண்டிய பிறகு, ஒரு முடுக்கில் திரும்பியதும் வீடு வந்து விட்டது. வாசலில் நான்கு பெரிய படகுகள் வரிசையாகக் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன.

கருப்புச் சாயம் பூசப்பட்ட பெரிய கேட் வழியே அவர்கள் நுழைந்ததும், கேட்டை ஒட்டினாற் போலிருந்த ஒரு அறைக்குள் போகச் சொன்னார்கள். அங்கே நிறைய படகோட்டிகளும், விவசாயக் கூலிகளும் இரண்டு மேஜைகளில் உட்கார்ந்திருந்தனர். அவர்களை ஏறெடுத்துப் பார்க்க அய் கு துணியவில்லை. கிழட்டு மிருகமும், சின்ன பிசாசும் அங்கே இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை.

ஒரு வேலைக்காரன் புத்தாண்டு கேக்கும் சூப்பும் கொண்டு வந்த போது, என்னமோ தெரியவில்லை. அவளுக்கு ரொம்பவும் சங்கடமாக இருந்தது. "நீதிபதிகூட அவருக்குத் தொடர்பு இருக்கிறதுனால நமக்காகப் பரிஞ்சு பேசமாட்டாரா என்ன?" என்று நினைத்துக் கொண்டாள்.