
சீனாவில் 2007ஆம் ஆண்டு வசந்தவிழா காலத்தில், பெய்சிங் Xi Zhan தொடர் வண்டி நிலையத்திலிருந்து 41 லட்சம் பேர் பயணம் செய்வார்கள். இந்நிலையம் அமைக்கப்பட்டது முதல் வசந்தவிழாக் காலத்திலான மிக உயர்ந்த பதிவு இதுவாகும்.
நாள்தோறும் சென்று திரும்பும் தொடர் வண்டிகளின் எண்ணிக்கை 180. பயணிகளின் எண்ணிக்கை 80 ஆயிரம் என்பதாக பெய்சிங் Xi Zhan தொடர் வண்டி நிலையம் வடிவமைக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இவ்வாண்டு வசந்தவிழாக் காலத்தில், மிக அதிகமான பயணிகள் பயணம் மேற்கொள்ளுகென, சில நாட்களில் சென்று திரும்பும் தொடர் வண்டிகளின் எண்ணிக்கை 146ஐ எட்டும். 2 லட்சம் பயணிகள் அப்போது பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|