• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    Apr 9th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-01 11:09:48    
சீன இந்திய நட்புறவு ஆண்டு என்னும் கட்டுரை போட்டிக்கு
தார்வழி பி. முத்து எழுதிய கட்டுரை

cri

சீனாவும் இந்தியாவும் உலகில் மிகப் பெரிய வளரும் நாடுகள் ஆகும். சீன மக்களின் பழக்க வழக்கங்களோடு இந்திய மக்களின் பழக்க வழக்கங்கள் ஒத்து போவதாக உள்ளன. சீன மக்கள் கொண்டாடும் வசந்த விழா வோடு தமிழ் மக்கள் கொண்டாடும் பொங்கள் விழா ஒத்து போகின்றந. இரு நாடுகளுக்குமே விவசாயம் முக்கிய தொழிலாக கொண்ட நாடுகளாகும். உயரிய தொழில் நட்பத்தை கையாளும் சீனாவோடு இந்தியா இணைந்து செயல்பட்டால் விவசாய துறையில் வேகமாக முன்னேறுவதோடு நாட்டிற்கு அதிக வருமானமும் கிடைக்கும்.

சீன இந்திய அரசியல் தலைவர் இரு நாட்டு நட்புறவு பயணத்துக்கு பிறகு தற்போது சீனாவின் வெளிநாட்டு திறப்பு கொள்கையின் மூலம் சீனாவில் இந்திய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்திய பொருளா சீன சந்தைகளிும் சீன பொருட்கள் இந்திய சந்தைகளில் எளிகுல் கடைக்க கூடிய வனவாக உள்ளன. இதன் மூலம் இரு நாட்டு பொருளாதாரம் வளருவது உறுதி. சீன இந்திய நட்புறவு இதனால் வளரும். சீனாவும் இந்தியாவும் இணைந்து செயல்படுவதன் மூலம் உலகளவில் தனி இடத்தை வகிக்க முடியும். எங்கும் எந்த நாட்டிலும் மிக குறைந்த விலையில் எளிதாக கிடைக்கக் கூடிய சின்னஞ்சிறிய பொருட்கள் முதல் கணிணி போன்ற அறிவியல் தொழில் நுட்ப சாதனைகள் மிக குறைந்த விலையில் கிடைக்க கூடிய பொருட்களை தயாரிப்பதில் சீன நிறுவனங்கள் முன்னணி வகிக்கின்றன. சீன மக்களின் அயராத உழைப்பின் மூலமே இழற்றை நிறைவேற்ற முடிகின்றது.

இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலுமே சீனப் பொருட்கள் இல்லாமல் இருக்காது சின்னஞ்சிறு விளையாட்டு பொருட்கள் முதற்க் கொண்டு வீட்டு உபயோக பொருட்கள் வரை சீன பொருள் கண்டிப்பாக இருந்தே தரும். அவ்வளவு மலிவான விலையில் சீனப் பொருட்கள் கிடைக்கின்றன. இந்திய சீன நட்புறவுக்கு வித்திட்டவர் சீன பயணியான யுவாங் சுவாங் எனலாம் என்பதற்கு வரலாற்று ஆதராரங்கள் உள்ளன.

சீனாவும் இந்தியாவும் பல துறைகளில் இணைந்து செயல்படுவதன் மூலம் உலகளவில் சிறந்த இடத்தை இருநாடுகள் பிடிப்பது உறுதி. இது போன்ற நமக்கு தெரிந்த தகவல்களை நமது நண்பர்கள் உறவினர்கள், தெரிந்தவர்களுக்கு எடுத்து கூறுவதன் மூலமும் நமது சீன வானொலி நிகழ்ச்சியினை கேட்க செய்வதன் மூலமும் சீன இந்திய நட்புறவு வளர்க்க முடியும் என்பது எனது கருத்து ஆகும்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040