• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-01 16:02:47    
சீனாவில் பண்பாட்டுத் தொழிலில் ஈடுபடுப்பவர்கள்

cri

சீனாவின் சென்சென் நகரில் நடைபெற்ற இரண்டாவது பண்பாட்டுப் பொருட்காட்சியில் அரசு புள்ளி விபரப் பணியகத்தின் துணைத் தலைவர் சாங் வெய் மின் வெளியிட்ட ஒரு தொகுதி கலைநிகழ்ச்சித் தொழிலின் புதிய புள்ளிவிபரங்கள் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளன. 2004ஆம் ஆண்டில் சீனாவில் 3 லட்சத்து 46 ஆயிரம் கலைநிகழ்ச்சி நிறுவனங்கள் இருந்தன. அவற்றில் 99 லட்சத்து 60 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இது தவிர, மேலும் 8 லட்சத்து 90 ஆயிரம் கலைநிகழ்ச்சி அமைப்பாளர்கள் தனியாகத் தொழில் செய்கின்றனர். கலைநிகழ்ச்சித் தொழிலில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை, சீனாவின் மொத்தம் 75 கோடியே 20 வட்சிம் தொழிலாளர்களில் 1.3 விழுக்காடு ஆகும். 2004ஆம் ஆண்டு சீனாவில் மொத்தம் 34 ஆயிரத்து 400 கோடி யுவான் மதிப்புக்கு கலை நிகழ்ச்சித் தொழில் நடந்துள்ளது என்று சாங் வெய் மின் கூறினார்.

தற்போது சீனாவின் கலைநிகழ்ச்சித் தொழிலில் இன்னும் சில பிரச்சினைகள் நிலவுகின்றன. ஒன்று, அது ஒப்பீட்டளவில் சிறியதாக இருக்கின்றது. இரண்டு, வளர்ச்சியடைந்த நாடுகளைவிட, சீனாவின் கலைநிகழ்ச்சித் தொழில் தேசிய பொருளாதாரத்தில் வகிக்கும் பங்கும் ஏற்படுத்திய செல்வாக்கும் இன்னும் குறைவாகவே இருக்கின்றன. மூன்று, பல்வேறு வட்டாரங்களில், கலைநிகழ்ச்சித் தொழிலின் வளர்ச்சி சமமற்று இருப்பது குறிப்பிடத்தக்கது என்று சாங் வெய் மின் சுட்டிக்காட்டினார்.