தற்போது சீன புதிய மூல பொருட்கள் தொழிற்துறை சீராக வளர்ந்துகொண்டிருக்கிறது. 2010ம் ஆண்டில் புதிய மூல பொருட்கள் தொழிற்துறை அதிகரிக்கும் வீதம் ஆண்டுதோறும் 20 விழுக்காட்டுக்கு மேலாகும் என்று சீன புதிய மூல பொருட்கள் தொழிற்துறை நிபுணர் வாங்சையி நேற்று பெய்ஜிங்கில் ஒரு சிறப்புத்தொழில் கூட்டத்தில் கூறினார்.
2006ம் ஆண்டில் சீன புதிய மூல பொருட்கள் தொழிற்துறையின் சந்தையளவு 3420 கோடி யுவானாகும். அடுத்த இரு ஆண்டுகளில், இதன் மதிப்பு 4500, 5600 கோடி யுவான்னை எட்டும் என்று மதிப்பிடப்பட்டது. இந்த புதிய மூல பொருட்கள் தொழிற்துறைகளில் அதிநுண்பொருள், மின்கலம் , ஒளி மின் பொருட்கள், அரிதான உலோகங்கள் ஆகியவை உள்ளடக்கம்.
|