• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-05 14:36:36    
சாங்சுன் குளிர்கால ஆசிய விளையாட்டு போட்டிகள்

cri

சீனாவின் வடகிழக்கு பகுதியின் ஜிலின் மாநிலத்திலுள்ள சாங்ச்சுன் நகரில் கடந்த ஞாயிறன்று தொடக்கம் நடைபெற்ற குளிர்கால ஆசிய விளையாட்டு போட்டிகளில் பல்வேறு ஆசியா சாதனைகள் முறியடிக்கப்பட்டு புதிய சாதனைகள் பதிவாகியுள்ளன. 1000 மீட்டர் விரைவு பனிச்சறுக்கு போட்டியில் ஆடவர் பிரிவில் தென்கொரிய அணியும், மகளிர் பிரிவில் சீன அணியும் புதிய ஆசிய சாதனைகளை படைத்தன. இது தவிர 500 மீட்டர் போட்டியில் சீனாவின் வாங் பெய்சிங் 1 நிமிடம் 17.35 வினாடிகள் என்ற சாதனை பதிவில் முதலிடம் பெற்றார். ஏற்கனவே இரண்டு தங்க பதக்கம் பெற்ற மற்ரொரு சீன வீராங்கனை வாங் ஃபெய் 1 நிமிடம் 17.54 வினாடிகள் என்ற பதிவில் வெள்ளி பதக்கம் பெற்றார். வாங் ஃபெய் முன்னதாக 3000 மீட்டர் விரைவு பனிச்சறுக்கு ஓட்டத்தில் ஜப்பானின் மேன்மையை புறக்கணிக்கும் வகையில் 4 நிமிடம் 13.08 வினாடிகள் என்ற ஆசிய சாதனை பதிவில் தங்கம் வென்றார். 1500 மீட்டர் பிரிவிலும் ஒரு தங்கம் வென்றார் இந்த 25 வயது நங்கை வாங் ஃபெய். 21 வயதான் வாங் பெய்சிங் தன் பங்குக்கு 1000 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றார்.

மொத்தத்தில் சீனா பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் நிற்க, தென் கொரியாவும் ஜப்பானும் அடுத இரண்டு இடங்களை பிடித்துள்ளன.