• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-06 10:06:18    
மீன் சூப்

cri

வாணி-- வணக்கம் நேயர்களே. இன்றைய சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில், ஒரு வகை மீன் சூப் தயாரிப்பது பற்றிப் அறிமுகப்படுத்துகின்றோம்.
க்ளீட்டஸ்-- அப்படியா?வாணி, தென் இந்தியாவில் மீன் வகை அதிகம். சீன வகை மீன் சூப் தயாரிப்பது பற்றி அறிய நமது நேயர்கள் விரும்புகின்றார்கள் என நம்புகின்றேன்.
வாணி-- நானும் நம்புகின்றேன். சீனாவில் 4 பிரதேசங்களின் காய்கறி வறுவல் தொகுதி மிகவும் புகழ்பெற்றது. இன்று சி சுவான் மாநிலத்து காய்கறி வறுவலின் சிறப்பியல்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மீன் சூப் பற்றி கூற இருக்கின்றோம்.
க்ளீட்டஸ்-- சரி. சி சுவான் மாநிலத்து மக்களுக்கு காரம் மிகவும் பிடிக்கும் அல்லவா?


வாணி-- ஆமாம். இந்த மீன் சூபும் காரம் தான். இப்போது, தேவையான பொருட்களின் பட்டியலைக் காண்போம்.
மீன் 1, (சுமார் 1 கிலோகிராம்)
காய்ந்த மிளகாய் 150 கிராம்
காலிக் சிறிதளவு
வெங்காயம் ஒன்று
உப்பு சிறிதளவு
முட்டையின் வெள்ளை பகுதி 1
சமையல் எண்ணெய் சிறிதளவு
வெள்ளரிகாய் 1
செசமி சிறிதளவு
க்ளீட்டஸ்-- செய்முறை பற்றி குறிப்பிடுக.
வாணி-- சரி.
முதலில், மீனை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பின்னர்,
இதன் இறைச்சியை 1.5 சென்திமீட்டர் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
க்ளீட்டஸ்-- முள்ளுகளை மீனிலிருந்து நீக்க வேண்டுமா?
வாணி-- ஆமாம். செல்வம். அடுத்து, மீன் இறைச்சியை தட்டில் வைத்து, உப்பு, முட்டையின் வெள்ளை பகுதி ஆகியவற்றைக் கலத்து சில நிமிடங்கள் அப்படியே இருக்கவிட வேண்டும். வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை அறிந்து வைக்கவும்.
வாணலியை அடுப்பின் மேல் வைத்து, சமையல் எண்ணெயை ஊற்றவும். இஞ்சி, வெங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். அடுத்து, தண்ணீரை வாணலியில் ஊற்ற வேண்டும். துண்டுகளாக அரிக்கப்பட்ட வெள்ளரிகாயை இதில் சேரக்கலாம். வேகவிடுக்கப்பட்ட பின், மீன் இறைச்சியை இதில் கொட்டவும்.
க்ளீட்டஸ்-- இந்த மீன் சூப் மிக சுவையாக இருக்கிறது. வேறு சூப்பை விட இதற்கு என்ன சிறப்பியல்பு உண்டு?

 
வாணி-- இருக்கு. ஒன்று மீன் இறைச்சியை வாணலியில் கொட்ட பிறகு, நீண்டகாலமாக அடுப்பின் மேல் இருக்க கூடாது. சூப் நீர் வேக வைக்கப்பட்ட பிறகு, வாணலியை அடுப்பிலிருந்து எடுக்கலாம். இரண்டு, சூப் தியாரிக்கப்பட்ட பிறகு, வேறு ஒரு செய்முறை உண்டு.
க்ளீட்டஸ்-- அப்படியா, சொல்லுங்கள்.
வாணி-- வாணலியை அடுப்பின் மேல் வைத்து, சமையல் எண்ணெயை ஊற்றி, இதில் மிளகாயை கொட்டவும். ஓரிரு நிமிடங்களாக காயவும். மிளகாயின் நிறம் சிறிதளவு மாறும் போது, இந்த எண்ணெயை மீன் சூபில் ஊற்றி, துண்டுகாளாக நிறுக்கிய வெங்காயத்தை கலக்கவும். இப்போது இந்த சி சுவான் மாநிலத்து சிறப்பு சுவையுடைய மீன் சூப் தயார்!
க்ளீட்டஸ் -- எப்படி, நேயர்களே. நீங்களும் வீட்டில் இந்த சூப் தாயாரித்து ருசி பாருங்கள். நீங்கள் இதனை மிகவும் விரும்புவீர்கள் என்பது நம்புகின்றோம்.
வாணி-- இத்துடன். இன்றைய சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி நிறைவுறுகின்றது. வணக்கம் கூறி விடைபெறுவோர், வாணி, வாணி