• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-06 10:16:07    
"தாவோயிசம்"-விளக்கம்

cri
ஒரு முறை சுவாங் ஸியிடம் ஒரு நண்பர் கேட்டார். "தாவோ தாவோ என்று பேசுகிறாயே! அது எங்கே இருக்கிறது?"
"எல்லை இடங்களிலும் இருக்கிறது" என்றார் சுவாங் ஸி.
"குறிப்பாகச் சொல்லு."
"விட்டில் பூச்சியிலும், எலும்புகளிலும் காணலாம்."
"அவ்வளவு மோசமானதா?"
"தானியங்களிலும், களைகளிலும் இருக்கிறது"
திகைத்துப் போனார் நண்பர்.
"தாவோ இவ்வளவு மலிவா?"
"ஓடுகளிலும் செங்கல்களிலும் இருக்கிறது"
"ஏன் இவ்வளவு குறைவாக தாவோயிசத்தை மதிப்பிடுகிறாய் நண்பா?"
"தாவோயிசம் மனிதனுடைய மலத்திலும் இருக்கிறது."
கிண்டலடிக்காதே என்று சீறினான் நண்பன். அதற்கு சுவாங்னி அமைதியாகப் பதில் சொன்னார்.
"மிகவும் சாதாரண மான
இழிவான தரக் குறைவான
விஷயங்களை உன்னால் பார்க்க
முடியாத போது, தாவோயிசத்தை
நீ எப்படி உணரமுடியும்?"
உண்மைதான். நம்மில் எத்தனை பேர் நமது மலத்தையே கூட உற்றுப் பார்த்திருக்கிறோம்?
கன்பூசியஸ் சிந்தனையாளர்களுக்கும் தாவோயிச வாதிகளுக்கும் இடையே ஏழாம் பொருத்தம். எப்போதுமே ஒருவரை ஒருவர் காலை வாரிவிடுவார்கள். கன்பூசியஸ் முன்வைத்த ஒழுங்கு, மனிதம், நற்கருணை என்ற கோட்பாடுகளை இருத்தலியல்வாதியான சுவாங் ஸி அறவே ஒதுக்கித் தள்ளினார். தாவோ கோட்பாட்டை முன்வைத்த லாவோ ஸிக்கு பிறகாலத்தில் சுவாங் ஸி என்ற ஆதரவாளர் கிடைத்தது போலவே, கன்பூசியஸ் கருத்துக்களைப் பரப்ப மென்ஷியஸ் என்ற புகழ் பெற்ற சந்தனையாளர் முன்வந்தார்.
கி. மு. 475 முதல் 221 வரை போரிடும் தேசங்கள் காலத்தில் அரசாண்ட ச்சி தேசத்து மன்னன் ச்சுவான், தனது தலைநகரான லின்ஸி என்ற ஊரில், ஜி வாசலுக்கு வெளியே மாபெரும் மாளிகை ஒன்றைக் கட்டி, அதற்கு "ஜிக்ஸியா கல்வி மாளிகை என்று பெயரிட்டான். அங்கே பற்பல சிந்தனையாளர்கள் கூடி, வாதம்பிரதி வாதங்களை நடத்தினார்கள். பட்டிமன்றமே நடந்தது. அதில் பல்வகை அறிஞர்கள் பாங்குற ஏறி வாதிட்டனர். சட்ட வியல் சிந்தனையாளர்கள், தருக்கவியல் சிந்தனையாளர்கள், மொகிஸ்த் சிந்தனையாளர்கள், யாங் எனப்படும் ஆக்க சக்தி மற்றும் யின் எனப்படும் அழிவு சக்தி சிந்தனையாளர்கள், அரசியல் மற்றும் ராணுல வியூகம் வகுப்பவர்கள், வேளாண் வல்லுநர்கள் என்று பலதரப்பு அறிஞர்கள் ஜிக்ஸியா மாளிகையில் திரண்டு சொற்பொழிவுகளை நடத்தினார்கள். ஆனால் கன்பூசியஸ்-தாவோ மோதல் தான் கடுமையாக இருந்தது. அப்பர் காலத்தில் நடந்த சைவ-சமண மோதல்களைப் போல.