• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-06 14:49:49    
கால்சிய மாத்திரை

cri

வணக்கம் மேயர்களே. இப்போது நல வாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நேரம். இன்றைய நிகழ்ச்சியில் கால்சிய மாத்திரை பற்றி கூறுகின்றோம். கால்சிய மாத்திரை பற்றிய விளம்பரங்களை எங்கெங்கும் காணலாம். கால்சிய மாத்திரையை உட்கொள்வது என்பது தற்போது ஒரு உடல் நல பாதுகாப்பாக மாறியுள்ளது. கால்சியம் என்பது மனித ுயலில் முக்கிய தனிமமாகும். ்து குறைந்தால் உடல் நலம் பாதிக்கப்படும். ஆனால் அளவுக்கு மீஞ்சி உட்கொண்டால் அல்லது சீராந முறையில் உட்கொள்ளத் தவறினால் எதிர்பாராத விளைவுகள் ஏற்படக் கூடும்.

உடலுக்கு இன்றியமையாத நுண் தனிமங்களை உட்கொள்வதற்கு இப்போது மிகுந்த கவனம் செலுத்தப்படுகின்றது. சரியான முறையில் கால்சிய மாத்திரை உட்கொள்ள தவறினால் மக்களின் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் சில நோய்களையும் விளைவிக்கும். எடுத்துக்காட்டாக சீனாவின் ஹோ பெய் மாநிலத்தில் ஊ அம்மையார் நாள்தோறும் 7-8 கால்சிய மாத்திரைகளை உட்கொள்வது வழக்கம். 10 ஆண்டுகளுக்கு மேலாக அவர் கால்சிய மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார். இருப்பினும் அண்மையில் அவருக்கு இடுப்பு வலி சிறு நீரில் ரத்தம் ஆகிய நோய் அறிகுறிகள் காணப்பட்டன. மருத்துவ மனைக்குச் சென்று பரிசோதித்த போது சிறு நீரக கல் நோய் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது. அளவுக்கு மீறி கால்சிய மாத்திரை உட்கொண்டதால் ிந்நோய் அவருக்கு ஏற்பட்டது என்று மருத்துவர் கூறினார். சியாங் சூ மாநிலத்தைச் சேர்ந்த திரு லியூவுக்கு உயர் ரத்த அழுத்தம் நோய் உண்டு. நாள் ஒன்றுக்கு 100 மிலி கால்சிய மாத்திரை உட்கொண்டால் ரத்த அழுத்தத்தில் 2.5 யூனிட்டுகளை குறைக்க முடியும் என்று அறிவியல் நூல் மூலம் அறிந்து கொண்டார். இந்நூல் சொன்ன படி நாள்தோறும் 600 மிலி கிராம் கால்சிய மாத்திரை உட்கொண்டால் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்தை உட்கொள்ளாமலேயே 15 யூனிட்டு ரத்த அழுத்தத்தை குறைக்க முடியும் என்று அவர் கருதினார். இவ்வாறு கால்சிய மாத்திரைகளை தொடர்ந்து உட்கொண்ட பின் மூளையில் ரத்தக் கசிவு நோய் ஏற்பட்டு வருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.


சரியான முறையில் கால்சிய மாத்திரை உட்கொள்ளாவிட்டால் பயன் தருவதற்கு பதிலாக தீமை விளைவிக்கும் என்பதை இந்த உதாரணங்கள் கூறுகின்றன. அப்படியிருக்க ஒரு நாளைக்கு எவ்வளவு கால்சிய மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்பது பற்றி பெய்சிங் பல்கலைக்கழகத்தின் சத்துணவு மற்றும் உணவுப் பொருட்களிந் பாதுகாப்பு துறையின் பேராசிரியர் லீ கெ ச்சி கூறுகிறார். 
உண்மையில் அரசு விதித்த படி உணவுப் பொருட்கள் மற்றும் துணை உணவுப் பொருட்கள் மூலமாக பாதுகாப்பாக கால்சியம் உட்கொள்ளும் அளவு ஒரு நாளைக்கு 2000 மிலி கிராமாகும். இந்த அளவைத் தாண்டினால் பக்க விளைவுகள் ஏற்படும் என்றார் அவர்.


அவர் மேலும் கூறியதாவது.ஒரு நாளைக்கு 2000 மிலி கிராம் கால்சியம் உட்கொள்வது உச்ச கட்டமாகும். பொதுவாக கூறின் ஒருவர் ஒரு நாளைக்கு 700 முதல் 1200 மிலி கிராம் வரை காசியம் உட்கொண்டாலே போதுமானது. சாதாரண உணவுப் பொருட்கள் மற்றும் துணை உணவு பொருட்களில் கால்சியம் சத்து உள்ளது. பொதுவாக கூறின் ஒரு நாளைக்கு 350 மிலி கிராம் கால்சியம் கிடைக்கும் கூடவே பால் குடித்தால் 500 கிராம் பாலில் 600 மிலி கிராம் கால்சியம் உண்டு. ஆகவே ஒருவர் ஒரு நாளில் சமச்சீர் உணவு பொருட்களைச் சாப்பிட்டால் அதுவும் பால் குடிக்கும் பழக்கத்தை வைத்திருந்தால் கால்சிய மாத்திரைகளை உட்கொள்ள தேவையில்லை.