• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-07 14:23:28    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: அடுத்து ராசிபுரம் இரா. வெங்கடேசன் எழுதிய கடிதம். கடந்த டிசம்பர் 19ம் நாளன்று சீனாவுக்கு சென்று வந்த சேந்தமங்கலம் எஸ். எம். ரவிச்சந்திரன் அவர்கள் சீனப்பெருஞுச்வர் பற்றி கூறக்கேட்டோம். பல ஆயிரம் கிலோ மீட்டர் நீள இந்த சீனப் பெருஞ்சுவர், நிலவிலிருந்து பார்த்தாலும் தெரியும் என்றும், உலக அதிசயங்களின் ஒன்று சீனப்பெருஞ்சுவர் என்றும் அவர் கூறினார். 6 அடி அகல இந்த மிக நீண்ட பெருஞ்சுவர் பற்றிக் கேட்டு மகிழ்ந்தோம் என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து காத்தான்குடி எம். எஸ். எம். ஜெம்சித் எழுதிய கடிதம். சீன வானொலியின் நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன். நேருக்கு நேர், செய்தித் தொகுப்பு போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் நன்றாக உள்ளன. எமது நாட்டு மக்கள் விரும்பும் பல நிகழ்ச்சிகள் உங்கள் ஒலிபரப்பில் இடம்பெறுகின்றன. உங்கள் ஒலிபரப்பின் அறிவிப்பாளர்களின் அறிவிப்பு பாணி எங்களைக் கவர்ந்துள்ளது என்று எழுதியுள்ளார்.

கலை: அடுத்து திருவாரூர் எம். எச். பசீர் அஹமது எழுதிய கடிதம். சீனவில் இஸ்லாமிய மக்கள் மூன்று கோடி பேர் உள்ள்னர் என்றூம், அதில் பத்தாயிரம் பேர் மக்க நகருக்கு ஹJ புனிதப்பயணம் மேற்கொண்டுள்ளனர் என்ற இனிப்பான செய்தியும் கேட்டு என் நெஞ்சம் மகிழ்ந்தது. மற்றொரு கட்டுரையில் காஷ் பகுதியில் வாழும் இஸ்லாமிய மதக்கல்வி ஆசிரியர் ஒருவரின் மாதச் சம்பள் குறைவு ஆனால் அவர் வைத்து நடத்தும் உணவு விடுதியின் வருவாய் முப்பதனாயிரம் என்று கூறியதைக் கேட்டு சீன மக்களின் உழைப்பை எண்ணி வியந்தேன் என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து திருச்சி காஜாமலை ஜி. பி. ஜனனிஸ்ரி எழுதிய கடிதம். கடந்த நவம்பர் 29ம் நாள் ஒலிபரப்பில் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் எனது கட்டுரையை இடம்பெறச் செய்து, அருமையான கட்டுரை என்று சான்று வழங்கியமைக்கு நன்றிகள். இயன்ற அளவு சீன வானொலிக்கும், இந்திய சீன நட்புறவுக்கும் நான் என்னால் முடிந்த பணிகளைச் செய்வேன். மேலும் தமிழகப் பயணத்தின் போது மறக்காமல் புத்தகம், காகித கத்தரிப்பு ஆகியவற்றை கொடுத்து என்னுடைய பணிக்கு ஊக்கமளித்தமைக்கு நன்றிகள் என்று எழுதியுள்ளார்.