• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-07 15:34:38    
தமிழ் மூலம் சீனம் பாடம் 69

cri

ராஜா......கலை கடந்த மாசத்தில் சசாங் சன் பற்றி நாம் முக்கியமாக கற்றுக் கொண்டோம். கஞ்காயாங்சி தமின் நேயர் மன்ற உறுப்பினர்கள் தாங்களை முன்வந்து தேர்வு நடத்தி முறையில் ச்சாங் சங் பற்றிய பயிற்சியை தொகுத்து எங்களுக்கு அனுப்பினார்கள்.

கலை.....ஆமாம். ராஜா. வகுப்பில் கற்றுக் கொள்வது மட்டுமல்ல, வாழ்க்கையில் பேசிப் பயிற்சி செய்வதும் மிக முக்கியமானது என்பதை கங்காயாங்சி தமிழ் நேயர் மன்றம் அனுப்பிய தேர்வுப் பயிற்சியை கேட்ட பின் நண்பர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என நம்புகின்றேன்.

ராஜா.....ஆமாம். மொழியைக் கற்றுக் கொள்வதில் முக்கியமாக பயிற்சி செய்ய வேண்டும். அதாவது நன்றாக பேசிப் பயிற்சி செய்தாலே லட்சியத்தில் 50 விழுக்காடு வெற்றி பெறலாம். ஆகவே நாம் புதிய மொழி கற்றுக் கொள்ளும் போது வகுப்பில் நன்றாக பேசிப் பயிற்சி செய்வதோடு வெளியிலும் திரும்பத்திரும்பப் பேச வேண்டும். சோம்பேறிப்படாமல் வாய் திறந்து பேச வேண்டும்.

கலை.....ராஜா நீங்கள் இப்படி நன்றாக பேசி பயிற்சி செய்கிறீர்களா?

ராஜா.....நான் கொஞ்சம் சோம்பேறிதான். நன்றாக பயிற்சி செய்ய வில்லை. ஆகவே வகுப்பில் நன்றாக பேசினாலும் வெளியே போனால் மறந்து விடுகின்றது. அதனால் பயிற்சி செய்வது மிக குறைவு.

கலை.....பரவாயில்லை. இதை புரிந்து கொண்டாலே போதும்.

ராஜா.....நான் இரட்டிப்பு முயற்சி செய்வேன்.

கலை..... இப்போது புதிய வகுப்பு துவக்கலாமா?

ராஜா.... துவக்குங்கள்.

கலை........சீனாவின் பணத்தில் மிக பெரிய அளவு யூவான் என்பதந் மதிப்பு இந்திய பணத்துக்கு 5 ரூபாய்த்தும் தூசஸாதும்ய யூவான் என்பது பேச்சுவழக்கில் குவய் என்று சொல்லப்படுவது வழக்கம். மக்கள் அன்றாட வாழ்க்கையில் குவய் என்ற சொல்லை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். எங்கள் செய்திகளை அறிவிக்கும் போது உற்பத்தி மதிப்பை எவ்வளவு யூவான் என்று தானே சொல்கிறோம்.

ராஜா......யூவான் குவய் என்ற இரண்டு சொற்களுமே ஒரே பொருனைக் குறிக்கின்றன. அப்படியிருந்தால் சீன பணத்தில் மிகச் சிறிய மதிப்பு எவ்வாறு சொல்லப்படுகின்றது.

கலை.....அதுவா. யூவானை விடக் குறைவாக சிசியாவ் அல்லது மாவ் என்ற பண அளவு இருக்கின்றது. இவற்றை விட மிக சிறிய பண மதிப்பு பஃன் என்பதாகும். பத்து பஃன் கொம்டது ஒரு ச்சியா. பஃன் என்றால் இந்திய பணத்தில் காசு என்பதற்குச் சமம்.
ராஜா.....எனக்கு புரிந்தது. பத்து ச்சியாவ் ஒரு யூவான். அல்லது ஒரு குவெய்வுக்கு சமமாகும். பத்து பஃன் ஒரு ச்சியாவுக்குச் சமமாகும். அப்படித்தானே.

கலை......சரிதான்.

கலை.......ராஜா இன்றைய வகுப்பில் 5 முக்கிய சொற்கள் உள்ளன. இவற்றை நீங்கள் உச்சரியுங்கள்.

ராஜா.......யூனான், குவய். ச்சியாவ். மாவ். பஃன்.

கலை......சரியாக உச்சரிக்கிறீர்கள். இவற்றின் பொருளை கற்றுக் கொண்டீர்களா?

ராஜா..... கற்றுக் கொண்டேன். நான் விளக்கி கூறுகின்றேன். யூவான் , குவய் என்பது சீன பணத்தில் மிக பெரிய மதிப்பு ஆகும். பஃன் என்பது மிக சிறிய மதிப்பு ஆகும். ச்சியாவ் அல்லது மாவ் யூவானை விட சிறியது. பஃனை விட பெரியது. அல்லவா?

கலை.......ராஜா நீங்க நன்றாக கற்றுக் கொண்டு விளக்கினீர்கள். சரி இன்றைய வகுப்பின் இரண்டாவது பகுதியை பயிற்சி செய்யலாம்.

ராஜா......கலை நீங்கள் தமிழில் வினா கேளுங்கள். நான் சீன மொழியில் பதிலளிக்கின்றேன்.

கலை........சரி. பயிற்சி செய்கின்றேன். இருபத்தொன்று யூவான்.

ராஜா.....அள்ஷ் யி யூவான்.

கலை..... முப்பத்திரண்டு யூவான். அல்லது அஸ்ளியி குவாய்

ராஜா........ சான்ஷ் அள் யூவான்.

கலை......... நாற்பத்திமூன்று யூவான்.

ராஜா......... ஸ்ஷ் சான் யூவான். அல்லது ஸ்ஷ்சான் குவாய்

கலை....... ஐம்பத்திநான்கு யூவான்.

ராஜா........ வூஷ்ஸ் யூவான். அல்லது வூஷ்ஸ் குவாய். 

கலை.....தொடர்ந்து பயிற்சி செய்கிவம். அறுபத்தைந்து யூவான்.

ராஜா........ லியுஷ் வு யூவான். 65 அல்லது லியுஷ் வு குவாய்

கலை...... எழுபத்தாறு யூவான்.

ராஜா........ ச்சிஷ் லியு யூவான். 76 அல்லது ச்சிஷ் லியு குவாய்

கலை........ எண்பத்தேழு யூவான். 87

ராஜா......... பாஷ் ச்சி யூவான். அல்லது பாஷ்ச்சி குவாய்

கலை....... தொண்ணூற்றெட்டு யூவான். 98

ராஜா....... ச்சியுஷ் பா யூவான். அல்லது ச்சியுஷ் பா குவாய்

கலை.......சரி. நாம் கணக்கு போடலாமா?

ராஜா.....எப்படி?

கலை......நான் யூவான், ச்சியாவ் பஃன் மூன்று சொற்களை இணைத்து பயன்படுத்தி சீன மொழியில் எண்ணிக்கையை சொல்கின்றேன். நீங்கள் தமிழில் பேசுங்கள்.

ராஜா......சரி நான் முயற்சி செய்கின்றேன்.

கலை......வூ யூவான் லியு ச்சியாவ் ச்சி பஃன். 567

ராஜா........ஐந்து யூவான் ஆறு ச்சியாவ் ஏழு பஃன்.

கலை.......மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள். வூ யூவான் லியு ச்சியாவ் ச்சி பஃன். 567

ராஜா........ஐந்து யூவான் ஆறு ச்சியாவ் ஏழு பிஃன்.

கலை....... அள்ஷ் பா யூவான் சான் ச்சியா ஸ் பஃன். 28.34

ராஜா........ இருபத்தெட்டு யூவான் மூன்று ச்சியாவ் நான்கு பஃன்.

கலை........மீண்டும் சொல்லுங்கள். அள்ஷ் பா யூவான் சான் ச்சியா ஸ் பஃன். 28.34

ராஜா........ இருபத்தெட்டு யூவான் மூன்று ச்சியாவ் நான்கு பஃன்.

கலை.......தொடர்ந்து பயிற்சி செய்யலாம்.
ச்சியுஷ் ச்சி யூவான் ஸ் ச்சியாவ் லியு பஃன். 97.46

ராஜா...... தொண்ணூற்றேழு யூவான் நான்கு ச்சியாவ் ஆறு பஃன்.

கலை.........மீண்டும் சொல்லுங்கள். ச்சியுஷ் ச்சி யூவான் ஸ் ச்சியாவ் லியு பஃன். 97.46

ராஜா...... தொண்ணூற்றேழு யூவான் நான்கு ச்சியாவ் ஆறு பஃன்.

கலை......நண்பர்களே இன்றுக்கு கற்றுக் கொண்ட நாணய சொற்களை மீண்டும் பயிற்சி செய்யுங்கள்.

ராஜா......யூவான், குவய், ச்சியாவ், மாவ், பஃன் என்பதை வாசியுங்கள்.

கலை.......யி யூவான் யி குவய், லியாங் யூவான் லியாங் குவய்.

ராஜா......யி ச்சியாவ், யி மாவ். லியாங் ச்சியாவ் லியாங் மாவ்.

கலை......அள் பஃன். லியாங் பஃன்.

ராஜா.......சான் பஃன் , வூ குவய்.

கலை......நண்பர்களே இன்றைய தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.

ராஜா.....அடுத்த வகுப்பில் மீண்டும் சந்திப்போம்.