6 நாட்கள் நடைபெறும் சீனத் திபெத் நிழற்படக் கண்காட்சி நேற்று இந்தியாவின் புகழ்பெற்ற பண்பாட்டு நகரான கல்கத்தாவிலுள்ள பிர்லா கலை மற்றும் பண்பாட்டு கழகத்தின் பொருட்காட்சி அகத்தில் துவங்கியது.
இந்திய-சீன நட்புறவுச் சங்கம், பிர்லா கலை மற்றும் பண்பாட்டு கழகம் இந்தியாவிலுள்ள சீனத் தூதரகம் ஆகியவை இக்கண்காட்சியை கூட்டாக நடத்துகின்றன.கண்காட்சியில் இடம்பெறும் சுமார் 300 படங்கள் திபெத் மக்களின் வாழ்க்கையையும் திபெத் பீடபூமியின் அழகான காட்சிகளையும் வெளிப்படுத்துகின்றன.
இக்கண்காட்சி கடந்த ஆண்டு ஆகஸ்ட் டிசம்பர் திங்களில் முறையே இந்திய தலைநகரான புதுதில்லியிலும், வட இந்தியாவின் சண்டிகரிலும் நடைபெற்றது.
|