• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-08 10:56:12    
உலக முன்னணியில் இருக்கும் சீனாவின் பல்கலைக்கழகக் கல்வி

cri

சீனாவில் கடந்த ஆண்டு பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை, 54 லட்சத்தை எட்டியது. 1998இல் இருந்ததை விட கடந்த ஆண்டு, சீனப் பல்கலைக்கழகங்களில் படித்தோரின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகமாகும்.பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வரும் மாணவர்களின் எண்ணிக்கையில் சீனா, உலகில் முதலிடத்தைப் பெறுகின்றது. சீனாவின் உயர் நிலை கல்வி, உலக முன்னணியில் இருப்பதாக சீனக்கல்வியமைச்சர் சோச்சி அண்மையில் தெரிவித்துள்ளார்.

மாட்டுச்சாணத்தைப் பொக்கிஷமாக்கிய. சீனப் பேராசிரியர் பெய்ஜிங் மாநகரைச்சேர்ந்த ஏன்சின் மாவட்டத்தில், முன்பு சாலைகளின் இரு புறங்களிலும் குவிந்து கிடந்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வந்த மாட்டுச்சாணங்கள், கருவூலமாக மாற்றப்பட்டுள்ளன. சீன வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வாங் ஹே நியன், சாணத்தைப் பயன்படுத்திக் காளானை வளர்ப்பதில் வெற்றி கண்டுள்ளார். அவர்தம் இச்சாதனையினால் விவசாயிகளின் வருவாய் பெரிதும் அதிகரித்துள்ளது. இப்புதிய தொழில்நுட்பம், பெய்ஜிங்கின் பிற ஊரகப் பகுதிகளிலும் பரவல் செய்யப் படவுள்ளது.

மிகப் பெரிய ஓட்டல் .தாய்லாந்தின் பாங்காக்கிலான TUM NUK THAI ஓட்டல், உலகில் மிகப் பெரிய உணவகமாகும்.அதன் பரப்பளவு, 4 கால்பந்து விளையாட்டரங்கங்களின் அளவுக்கு நிகரானது. அதன் மைய மண்டபத்தில் மட்டும், ஒரே நேரத்தில் 5000 பேரை வரவேற்றுபசரிக்கலாம். அனைத்துப் பணியாளர்களும் சக்கரக் காலணிகளில் சறுக்கிச்சென்று பணிவிடை செய்கின்றனர்.

முதலாவது கடலடி ஓட்டல் .இஸ்ரேல் நாட்டில், RED SEA STARS எனப்படும் செங் கடல் நட்சத்திர ஓட்டலானது, உலகில் முதலாவது கடலடி உணவகம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.1993இல் சேவை செய்யத் துவங்கிய இவ்வுணவகத்தில், சுற்றுலாப் பயணிகள் நீர்வாழ்வனவற்றை உண்டு சுவைப்பதோடு, கடலடி உலகையும் கண்டு களிக்கலாம்.

67வயதில் குழந்தை பெற்ற பெண் .ஸ்பெயின் நாட்டடைச் சேர்ந்த, 67 வயது பெண் கமீலா புசதா என்பவருக்கு, கடந்த திசம்பர் திங்கள் 29ஆம் நாள் அறுவை சிகிச்சை மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. உலகிலே அதிக வயதில் குழந்தை பெற்ற பெண் இவரே ஆவார்.
67 வயது என்று சொன்னால் மருத்துவ மனையில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார் என்பதால்,அவர் தன் வயதை 55 என்று குறைத்துச்சொன்னதாகச் செய்தியாளரிடம் தெரிவித்தார். வாழ்நாள் முழுவதும் வயதான தாயுடன் வசித்து வந்ததால் புசதா திருமணம் செய்து கொள்ளவே இல்லை. தாயார் இறந்ததும், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. இதனால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சிலிஸ் நகரிலுள்ள ஒரு மருத்துவ மனையில் சோதனைக் குழாய் மூலம் கருத்தரித்துக் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டார். இப்போது இந்த இரட்டைக் குழந்தைகளை வளர்ப்பதற்கு இளம் கணவர் ஒருவர் தேவை என்று அவர் நினைக்கிறார்.


பண்டைய இசையைக் கேட்க விரும்பும் பன்றிகள் .பன்றிகளைப் பண்டைய இசையைக் கேட்கச்செய்தால், அவை கொழு கொழு என்று கொழுத்து வளரும் என்று வியட்னாம் நாட்டவர் ஙியான் ஜி குங் கண்டறிந்துள்ளார்.
44 வயதுடைய இவர், பன்றி வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுபவர். 6 ஆண்டுகளுக்கு முன், தான் வளர்க்கும் பன்றிகளுக்குப் பண்டைய இசையை ஒலிபரப்பத் தொடங்கினார். இந்த இசையைக் கேட்கக் கேட்க, பன்றிகள் அதிக அளவில் உணவு உண்ணத் துவங்கின. வரவர அவற்றின் உடல் எடைகளும் கூடிக் கொண்டே போயிற்று. அதன் பின்,நாள்தோறும் காலை 7 முதல் 11 மணி வரை,பிற்பகல் 2 முதல் 4 மணி வரை அவர் தன் பன்றிகளுக்கு பண்டைய இசையை ஒலிபரப்பி வருகிறார். வியட்னாமில், பன்றி வளர்ப்பில் ஈடுபட்ட பலர், அவரது அனுபவத்தில் ஆர்வம் காட்டியுள்ளார்கள்.