• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-08 18:28:16    
சீனாவின் சின்சியாங்கில் பனியைப் பார்க்க வாருங்கள்

cri

வணக்கம் நேயர்களே. இன்றைய நிகழ்ச்சியில், கலைமகளுடன், மேற்கு சீனாவிலுள்ள சின்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் சென்று, அங்குள்ள குளிர்காலத்தின் காட்சியைப் பாருங்கள்.
2007ம் ஆண்டின் முதலாவது பனிப் பொழிவினால், சின்சியாங்கின் தலைநகரான உருமுச்சியில் எங்கெங்கும் வெள்ளிக்காட்சியைக் காணலாம். இந்தச் சிறந்த மூலவளத்தைப் போதிய அளவில் பயன்படுத்தி, பனிச் சுற்றுலா சின்னத்தை உருவாக்கும் பொருட்டு, உருமுச்சி, பட்டுப் பாதை பனி விழாவை நடத்தியது. நகரின் மேயர் நாயிமு யாசன் விருந்தினர்களுக்கு வரவேற்பைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
நடப்புப் பனி விழாவில், தலைச்சிறந்த சுற்றுலா உற்பத்தி பொருட்களையும் சேவையையும் பயன்படுத்தி, பெரும்பாலான பயணிகளுக்கு இன்பமான நினைவை வழங்கி, தாய்நாட்டுக்கும் உலகிற்கும் சின்சியாங்கின் இணக்கமான செழுமையான புகழை எடுத்துக்காட்ட வேண்டும் என்றார் அவர்.


நீளமான குளிர்காலம், சின்சியாங்கின் உருமுச்சி நகரத்துக்கு செழிப்பான பனிச் சுற்றுலா மூலவளத்தை வழங்கியுள்ளது. மென்மேலும் அதிகமானோர் குளிர்காலத்தில் வெளியே சென்று, பசுமையான காற்றை சுவாசிக்க விரும்பினர். இவ்வாண்டின் புத்தாண்டும், இஸ்லாமிய பாரம்பரிய விழாவான குர்பான் விழாவும் ஒரே காலத்தில் கொண்டாடப்பட்டதால், சின்சியாங்கின் சிறுபான்மை தேசிய இன மக்களுக்கு 8 நாட்கள் விடுமுறை கிடைத்தது. உருமுச்சியின் பட்டுப்பாதை சர்வதேச பனிச்சறுக்கல் திடல், XUE LIAN SHAN என்னும் GOLF பனிச்சறுக்கல் திடல் முதலிய பனிச்சறுக்கல் திடல்களுக்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை, சாதாரண நாட்களில் இருந்ததை விட 4 அல்லது 5 மடங்கு அதிகமாகும். ஏராளமான பயணிகளைப் பார்த்து, XUE LIAN SHAN என்னும் GOLF பனிச்சறுக்கல் திடலின் வர்த்தகப் பிரிவின் தலைவர் XU XIA மகிழ்ச்சியடைந்தார். அவர் கூறியதாவது:
புத்தாண்டில், எமது பனிச்சறுக்கல் திடல், புதிய சாதனையைப் பெற்றுள்ளது. குர்பான் விழாக் காலத்தில், 3000 பயணிகள் இங்கு வந்து தங்கினர். வாகன தங்கும் இடத்திலும் 8 பனிச்சறுக்கல் பாதைகளிலும் அதிக பயணிகள் எண்ணிக்கையால் நெரிசல் ஏற்பட்டது. புத்தாண்டிலும், 300 பயணிகள் இங்கே வந்து விளையாடினர் என்றார் அவர்.


உருமுச்சி நகரத்தின் HONG SHAN பூங்காவில், பெய்ஜிங்கின் தியென் ஆன் மன் சதுக்கத்தின் மாதிரியாக தயாரிக்கப்பட்ட 6 மீட்டர் உயரமும் 10 மீட்டர் நீளமும் கொண்ட பெரிய பனிச் சிற்பம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பனி விழாக் காலத்தில், பெரிய ரக அரண்மனை விளக்கு கலைக் கண்காட்சியும், பனிச் சிற்பப் படைப்புக் கண்காட்சியும் தொடங்கியுள்ளன. இந்த பனிச் சிற்பக் கண்காட்சிக்கு வைக்கப்பட்ட 160 படைப்புகள், சின்சியாங்கின் சிறப்பான பழக்கவழக்கங்களையும் மனித இயல்பு வரலாற்றையும் பிரதிபலிக்கின்றன.

 
வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் குறுகிய காலத்துக்குள் சின்சியாங்கின் பனி உணர்வை போதிய அளவில் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு, இவ்வாண்டில், உருமுச்சி நகரம், பனிச் சுற்றுலாக்கான ஐந்து சிறப்பு நெறிகளைத் திறந்து வைத்துள்ளது. இதில், காஷ், தியேன் ச்சி, துருபான் முதலிய புகழ்பெற்ற இயற்கைக் காட்சிகள் இடம்பெறுகின்றன. உள்ளூரின் தேசிய இன பழக்கவழக்கங்கள் சின்சியாங் குளிர்காலத்தின் சுற்றுலாவை வலிமையாக தூண்டியுள்ளன என்று சின்சியோங் சுற்றுலா பணியகத்தின் அதிகாரி CHI CHONG QING கருதினார். அவர் மேலும் கூறியதாவது:
சின்சியாங்கின் குளிர்காலச் சுற்றுலா மூலவளம் நன்றாக இருக்கிறது. இதை, தேசிய இன பழக்கவழக்கம், பட்டுப்பாதை ஆகியவற்றுடன் இணைத்து, அவற்றின் தனிச்சிறப்பியல்பையும் பண்பாட்டையும் பயன்படுத்தி, சுற்றுலாத் துறையை வளர்க்க முடியும் என்றார் அவர்.