சீன வணிக அமைச்சரின் உதவியாளர் அளித்த பேட்டி
cri
சீனாவின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் ஒரு பகுதி தொழில் துறைகளில் அன்னிய முதலீடு நுழைய அனுமதி வழங்கும் வரையறையை சீனா உரிய முறையில் தளர்த்தும். அதன் மூலம் அன்னிய வணிகர்களுக்கும், சீனாவின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் தொடர்பையும் சீனா வலுப்படுத்தும் என்று சீன வணிக அமைச்சரின் உதவியாளர் Fu Zi Ying கூறியுள்ளார். அண்மையில் செய்தியாளருக்குப் பேட்டி அளிக்கையில் அவர் இதைத் தெரிவித்தார். முன்னேறியத் தொழில் நுட்பங்கள், முன்னேறிய நிர்வாகம், அன்னிய திறமைசாலிகளை உட்புகுத்துவதை முக்கியமாகக் கொண்டு, கிழக்கு பகுதியில் உள்ள பதனீட்டு வர்த்தகம், இப்பகுதிகளுக்குள் நுழைவதற்கு வழிகாட்டி, கிழக்கு பகுதியின் அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களும், உள் நாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்களும், இப்பகுதியில் மீண்டும் முதலீடு செய்ய தூண்டப்படும் என்று அவர் கூறினார். மேலதிக பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்து தொழில் நடத்த வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
|
|