• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-09 15:16:24    
பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தன்னார்வலர்களர்

cri

பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கான பாரலிம்பிக் போட்டிகளின் போதான பல்வேறு சேவைகளுக்கு உதவியளிக்கும் வகையில் தங்களால் இயன்றதைச் செய்யும் தன்னார்வத் தொண்டர்களுக்கென பெய்சிங் ஒலிம்பிக் கமிட்டி விண்ணப்பங்களை வரவேற்றது பற்றி நாம் செய்திகளில் கேட்டிருப்போம். முதற்கட்டமாக பெய்சிங் மாநகருக்குள் வாழும் மக்களிடன் இந்த விண்ணப்பங்கள் கடந்த ஆண்டின் பிற்பாதியில் வரவேற்கப்பட்டன. அதற்கு பின் பெய்சிங் மாநகருக்கு வெளியா, புறநகர் பகுதியில் வசிப்பவர்களும் இந்த தன்னார்வ பணிகளில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இப்படி வந்து சேர்ந்த விண்ணப்பங்கள் ஜனவரி 31ம் நாள் வரையிலான கணக்குப்படி 3 லட்சத்து 20 ஆயிரம் என்று பெய்சிங் ஒலிம்பிக் தன்ர்வ பணி ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. பெய்சிங்கி மாநகரில் மட்டும் 2 லட்சத்து 56 ஆயிரத்து 180 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. அவற்றில் 71 விழுக்காடு பல்கலைக்கழகங்கள் மற்ரும் பள்லிகளின் மாணவ்ர்களின் விண்ணப்பங்களாகும், அதாவது 1 லட்சத்து 81 ஆயிரத்து 570 விண்ணப்பங்கள். பெய்சிங்கிற்கு புறநகர்பகுதிகளில் வாழ்பவர்களின் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 610. ஆனால் இதுவரை வந்து சேர்ந்த 3 லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பங்களில் என்ற எண்ணிக்கை, இந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்குத் தேவையான 70 ஆயிரம் பேர், பாரலிம்பிக் போட்டிகளுக்குத் தேவையான 30 ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையைவிட மிக அதிகமாக உள்ளது. இந்த விண்ணப்பங்களில் முதற் தொகுதி தன்னார்வத் தொண்டர்கள் இவ்வாண்டு ஆகஸ்ட் திங்களுக்குல் தெரிவு செய்யப்படுவார்கல் எனப்படுகிறது. அதேவேளை ஒலிம்பிக் போட்டிகளின் போதான ஒலிம்பிக் விளையாட்டுத் திடலகள், வீரர் வீராங்கனைகள் தங்குமிடங்கள், மாநகரம் முழுவதிலாம போக்குவரத்து முனையங்கள், எழில்மிகு காட்சித்தளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உதவிப்பணிகல் நல்க தன்னார்வத் தொண்டர்கள் தேவைப்படுகிறது. அந்த பணிகளுக்கான தன்னார்வத் தொண்டர்களுக்கான விண்ணப்பம் அடுத்த ஆண்டு துவங்கும் எனப்படுகிறது.