• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-09 15:33:51    
லியு சியாங்கின் சாதனை

cri

சீனாவின் பறக்கும் மனிதன் என்றழைக்கப்படும் 110 மீட்டர் தடையோட்ட உலக சாதனை வீரர், ஒலிம்பிக் வெற்றியாளர் லியு சியாங் 2007ம் ஆண்டின் முதல் தங்க பதக்கத்தை அண்மையில் ஜெர்மனியின் டசல்டார்ஃபில் நடந்த உள் அரங்க தடகள போட்டிகளின் 60 மீட்டர் தடையோட்டத்தில் வென்றுள்ளார். 3 நாட்கள் முன்னதாக ஜெர்மனியின் ஸ்டுட்கார்டில் நடைபெற்ற உள் அரங்க தடகள போட்டிகளின் 60 மீட்டர் தடையோட்டப்பந்தயத்தில் 0.08 வினாடிகளில் தங்கத்தை கியுபாவின் டெய்ரோன் ராபில்ஸிடம் நழுவவிட்டார் லியு சியாங்.

டசல்டார்ஃபில் நடைபெற்ற பந்தயத்தில் 7.53 வினாடிகளில் இலக்கை அடைந்து டசல்டார்ஃப் உள்ளரங்க போட்டிகளின் 60 மீட்டர் ஆடவர் தடையோட்டத்திற்கான முந்தைய சாதனையை அவர் முறியடித்தார். இப்போட்டியில் தங்க பதக்கம் வென்றது மட்டில் மன நிறைவை தெரிவித்த லியு சியாங்கின் 2007ம் ஆண்டின் முதல் வெற்றி இதுவாகும்.