கடந்த ஆண்டு, சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பொருளாதாரம், "விரைவான வேகம், சிறந்த பயன், வலுவான உயிராற்றல்" கொண்ட சிறந்த வளர்ச்சி நிலையில் இருந்தது. முழு பிரதேசத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு, சுமார் 2900 கோடி யுவானாகும். அதிகரிப்பு விகிதம் 13 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. 1996ஆம் ஆண்டு முதல் மிக உயர் அதிகரிப்பு பதிவு இதுவாகும். திபெத் பொருளாதாரத்தின் விரைவாக வளர்ச்சிக்கு, முதலீடு, நுகர்வு, மற்றும் அன்னிய வர்த்தகம் காரணமாகும் என்று திபெத் தன்னாட்சி பிரதேச அரசின் அதிகாரி ஒருவர் விவரித்தார். 2006ஆம் ஆண்டு, திபெத்தில், முழு சமூகத்தின் நிலையான சொத்து முதலீட்டுத்தொகை, 2300 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. நுகர்வுத்துறையில், சுற்றுலா, கார், உறைவிட வசதி, உணவகம், பொழுது போக்கு உள்ளிட்ட நுகர்வுகளின் தேவை இடைவிடாமல் அதிகரித்து வருகின்றது. சிங்காய்-திபெத் ரயில் பாதை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டதினாலும், Lin Zhi விமான நிலையம் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டதினாலும், திபெத்தின் அன்னிய வர்த்தகம் வேகமாக அதிகரித்து வருகின்றது.
|