குவாங் சியில் சர்வதேச போக்குவரத்து பாதை
cri
வசதியான தரை மற்றும் கடல் பாதைகளைக் கட்டுவதன் மூலம் சீனாவின் அனைத்து Zhu Jiang ஆற்று கழிமுகப் பொருளாதார மண்டலத்துக்கும் ஆசியாவின் பெரும் சந்தைக்குமிடையிலான இடைவெளியைக் குறைக்கும் பொருட்டு, இவ்வாண்டு சீனாவின் குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசம் 2000 கோடி யுவானை முதலிட்டு, எங்கெங்கும் வசதியான போக்குவரத்து வலைப்பின்னலை கட்டவுள்ளது.
சீனாவுக்கும் ஆசியானுக்குமிடையில் திறமைசாலி நடமாட்டம், பொருள் போக்குவரத்து, நிதி புழக்கம் ஆகியவற்றை முன்னேற்றுவித்து, இரு தரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்பு தரத்தை உயர்த்துவது, இச்சர்வதேச பெரும் பாதையைக் கட்டுவதன் நோக்கமாகும் என்று தன்னாட்சிப் பிரதேசத்தின் துணை தலைவர் அண்மையில் தெரிவித்தார்.
|
|